Singapore Work Pass : உரிய உரிமம் இல்லாமல், சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்த மருத்துவர் ஒருவரை கடுமையாக தண்டித்துள்ளது சிங்கப்பூர் அரசு.
சிங்கப்பூரில் வெளிநாட்டவர்கள் பனி செய்திட உரிய உரிமம் என்பது மிகவும் அவசியம், அப்படி உரிய வேலை பாஸ் உரிமம் இல்லாமல் பணி செய்பவர்கள் மீதும், அவர்களை சட்டவிரோதமாக வேலைக்கு அபார்த்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றது சிங்கப்பூர் அரசு. அந்த வகையில் சிங்கப்பூரில் சட்டவிரோதமாக மருத்துவர் தொழில் செய்து அதன் மூலம் கிட்டத்தட்ட S$331,500 (US$251,600) சம்பாதித்துள்ளார் ஒரு நபர்.
சிங்கப்பூர் மருத்துவ கவுன்சில் அவர் மீது கடும் நடவடிக்கை எடுத்துள்ளது, டாக்டர் குவெக் கியான் கெங் என்ற அந்த நபருக்கு ஏற்கனவே கடந்த ஜூன் 2021ல் S$70,000 அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சரியான வேலை அனுமதி பாஸ் இல்லாமல் சுயதொழில் செய்யும் வெளிநாட்டவராகப் பணிபுரிந்ததன் மூலம் வெளிநாட்டு மனிதவளச் சட்டத்தை மீறியதற்காக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
“பயங்கரவாத தாக்குதல் நடக்கலாம்..” இந்தியாவில் இருக்கும் தனது குடிமக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை..
அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட சுகாதார நிபுணர்களுக்கான பட்டியலின் அடிப்படையில், டாக்டர் குவெக் தற்போது மவுண்ட் அல்வேர்னியா மருத்துவமனையில் உள்ள KK Queck நரம்பியல் மையத்தில் நரம்பியல் நிபுணத்துவம் பெற்றுள்ளார். ஆனால் அவர் எந்த நாட்டவர் என்பது குறிப்பிடப்படவில்லை.
அவர் கடந்த 2009 ஆம் ஆண்டில் மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை முடித்து, அதன் பிறகு சிங்கப்பூரில் பணி செய்யத்துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. சிங்கப்பூரில் நரம்பியல் துறையில் அவர் பணிசெய்து வந்தாலும், பல்வேறு மருத்துவக் கிளினிக்குகளில் மருத்துவராகப் பணிபுரிவதற்கான சரியான பணி அனுமதிச் சீட்டு அவரிடம் இல்லை.
32 மாகாணங்களுக்கு பரவிய ஜாம்பி மான் நோய்.. மனிதர்கள் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?
ஏற்கனவே அவருக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், இப்பொது கூடுதலாக 50,000 சிங்கப்பூர் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் முறையான ஆவணங்கள் மற்றும் பணி அனுமதி இல்லாமல் பணிசெய்தால், அந்த பணியில் அளவில் பாரபட்சம் இல்லாமல் தண்டனை வழங்கி வருகின்றது சிங்கப்பூர் அரசு.