அடி தூள்... ஆகஸ்ட் மாதத்திற்குள் தடுப்பூசி தயார்..!! அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி ரஷ்யா அதிரடி..!!

By Ezhilarasan BabuFirst Published Jul 31, 2020, 3:04 PM IST
Highlights

கமலேய ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆப்  எபிடெமியாலஜி அண்ட் மைக்ரோபயாலஜி உருவாக்கிய  தடுப்பூசி, விரைவில்  பதிவு செய்யப்பட உள்ளது எனவும், பதிவு செய்யப்பட்ட 3 முதல் 7 நாட்களுக்குள், பொது பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

ஆகஸ்ட் மாதம் 10 மற்றும்12 ஆகிய தேதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பூசி மக்களின் பயன்பாட்டிற்கு தயாராக இருக்கும் என்றும், அது ஆகஸ்டு 15, 16 ஆகிய தேதிகளில் சந்தை விற்பனைக்கு வரக்கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. 180 க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது. இதுவரை 1.75 கோடி பேரை இந்த வைரஸ் பாதித்துள்ளது. இதுவரை 6.67 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸை தடுக்க  எத்தனையோ நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுத்தும், அதன் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பிரத்யேக தடுப்பூசியால் மட்டுமே இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியும் என ஒட்டுமொத்த உலக நாடுகளும் தடுப்பூசி எதிர்நோக்கி காத்திருக்கிறது.

 

இந்நிலையில்  பாரத் பயோ டெக்கின் கோவேக்சின், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கோவிட் ஷீல்டு ஜைடஸ், கேடிலாவின் ஜைகோவ்-டி, ரஷ்யாவின் பாதுகாப்பு துறை சார்பில் இயங்கும் கமலையே தொற்றுநோய் மற்றும் உயிரியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தடுப்பூசி என பல தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் மாஸ்கோவின் கமலேய ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆப்  எபிடெமியாலஜி அண்ட் மைக்ரோபயாலஜி உருவாக்கிய  தடுப்பூசி, விரைவில்  பதிவு செய்யப்பட உள்ளது எனவும், பதிவு செய்யப்பட்ட 3 முதல் 7 நாட்களுக்குள், பொது பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மொத்தத்தில் ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்த தடுப்பூசி மக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த  தடுப்பூசியின் முதற்கட்ட சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது.

 

இந்த மாத தொடக்கத்தில், மனித சோதனைகளை வெற்றிகரமாக முடித்ததாகவும் அறிவிக்கப்பட்டது. அதன் இரண்டாம் கட்ட சோதனைகள் ஜூலை 13 அன்று தொடங்கியது என்று டாஸ் செய்தி நிறுவனத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. ஒரு தடுப்பூசி என்றால் மூன்று கட்ட பரிசோதனைகளை  நிறைவு செய்த பின்னரே அது மக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும். ஆனால் இந்த தடுப்பூசியை பொருத்தவரையில் மூன்றாம் கட்ட சோதனைக்கு முன்பாகவே மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர  ரஷ்யா முடிவு செய்துள்ளது. இரண்டாவது கட்ட சோதனை முடிவுகளின் அடிப்படையில் இது அனுமதி பெற வாய்ப்புள்ளது எனவும், தடுப்பூசி உற்பத்தி செப்டம்பரில் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று கட்ட மருத்துவ பரிசோதனைகள் முடியும் வரை தடுப்பூசி சுகாதார நிபுணர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. 

\

click me!