கொரோனா வைரசில் இருந்து பாதுகாத்துக்கொள்ள போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் மருத்துவர்கள் தவித்து வரும் நிலையில் நியுயார்க் ஆளுநருக்கு அமெரிக்க விவசாயி ஒருவர் தன்னிடம் இருந்த இரண்டு முகக் கவசங்களை அனுப்பி வைத்துள்ள சம்பவம் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
கொரோனா வைரசில் இருந்து பாதுகாத்துக்கொள்ள போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் மருத்துவர்கள் தவித்து வரும் நிலையில் நியுயார்க் ஆளுநருக்கு அமெரிக்க விவசாயி ஒருவர் தன்னிடம் இருந்த இரண்டு முகக் கவசங்களை அனுப்பி வைத்துள்ள சம்பவம் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . இந்த முகக் கவசங்களை தயவுசெய்து உங்கள் நகர மருத்துவமனையில் உள்ள ஒரு மருத்துவருக்கோ அல்லது மருத்துவ பணியாளர்களுக்கோ வழங்குங்கள் என அந்த நபர் ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது ,இந்நிலையில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவிலேயே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர் . கிட்டத்தட்ட அமெரிக்காவில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54 ஆயிரத்தை தாண்டியுள்ளது . இந்நிலையில் வைரஸ் இன்னும் பலருக்கு பரவக்கூடும் என்றும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மேலும் தொடரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது .
ஒட்டு மொத்த அமெரிக்காவும் கொரோனாவால் முடங்கியுள்ள நிலையில், அந்நாட்டிலுள்ள மருத்துவர்கள் தங்களுக்கு போதிய பாதுகாப்பு கவசங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தாங்கள் பணியில் ஈடுபட நிர்பந்திக்கப்படுகிறோம் என அரசுக்கு எதிராக புகார் எழுப்பி வருகின்றனர். அதே நேரத்தில் நாட்டு மக்களும் போதிய முகக் கவசங்கள் இல்லாமல் கொரோனா பீதியில் உறைந்துள்ளனர் . இந்நிலையில் அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த டென்னிஸ் ருஹ்ன்கே (72) வயது விவசாயி தன்னிடமிருந்த சில N95 ரக முக க்கவசங்களில் இரண்டு மகக்கவசங்களை நியூயார்க் ஆளுநருக்கு ஆன்ட்ரூ கூமோவுக்கு அனுப்பி வைத்துள்ளார். இது அமெரிக்காவில் நெகிழ்ச்சியையும் சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது . இது குறித்து தெரிவித்துள்ள அந்த விவசாயி , நியூயார்க் மாநிலத்தில் முக கவசம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மாநில ஆளுநர் ஆண்ட்ரூ கூமோ தெரிவித்திருந்தார் , ஆகவே நான் ஏற்கனவே விவசாய வேலைக்கு பயன்படுத்த ஏற்கனவே 5 N95 ரக முகக்கவசங்கள் வாங்கி வைத்தேன் , இப்போது எங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு போக 2 முகக்கவசங்கள் மீதமிருந்தது எனவே இந்த இரண்டு முகக்கவசங்களை யாருக்காவது வழங்க வேண்டும் என விரும்பினேன் ,
நியுயார்க்கில் மருத்துவர்கள் பலரும் முகக்கவசங்கள் இல்லாமல் அவதிப்படுவதை அறிந்து இதை அம்மாகாண ஆளுநர் ஆன்ட்ரூ கூமோவுக்கு அனுப்ப முடிவு செய்தேன், அதனால் இணையதளத்தில் அவரது முகவரியை தேடிப்பிடித்து அவருக்கு இரண்டு முகக்கவசங்களை அனுப்பி வைத்தேன் என தெரிவித்துள்ளார். இதற்கிடையில் அந்த முகமூடியுடன் அவர் தன் கைப்பட அவருக்கு எழுதிய கடிதத்தில் , விவசாய நாட்களில் பயன்படுத்த வாங்கியதில் மிச்சம் , இதை நான் ஒருபோதும் பயன்படுத்தவில்லை உங்களால் முடிந்தால் தயவுசெய்து இந்த முகமூடிகளை உங்கள் நகரத்தில் உள்ள ஒரு செவிலியர் அல்லது மருத்துவரிடம் கொடுக்க முடியுமா எனக்கேட்டு கொண்டுள்ளார். இந்நிலையில் வழக்கம்போல செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் ஆண்ட்ரூ கூமோ இந்த விவசாயியை மனம் திறந்து பாராட்டியுள்ளார் , நீங்கள் உங்களிடம் இருந்த 5 முகமூடிகளில் உங்கள் குடும்பத்திற்கானதை எடுத்து வைத்துக்கொண்டு மீதம் இருந்ததை மறைக்காமல் அருகில் இருக்கிற மருத்துவர்களுக்கு அனுப்பி இருக்கிறீர்கள். இது மிகவும் அழகாகவும் , உணர்வு பூர்வமாகவும் இருக்கிறது, இது உங்கள் தன்னலமற்ற குணத்தைக் காட்டுகிறது உங்களை நான் பாராட்டுகிறேன் என அந்த விவசாயியை அவர் வாழ்த்தி உள்ளார்.