மனைவியின் காதுகளை அறுத்த கணவன் – குடும்ப தகராறில் பயங்கரம்

Asianet News Tamil  
Published : Feb 02, 2017, 01:21 PM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
மனைவியின் காதுகளை அறுத்த கணவன் – குடும்ப தகராறில் பயங்கரம்

சுருக்கம்

குடும்ப சண்டையில், மனைவியை கட்டிப்போட்டு, அவரது 2 காதுகளையும் கணவன் அறுத்துவிட்டார்.

ஆப்கானிஸ்தான், வடக்கு மாகாணம், பால்க்கில் பகுதியை சேர்ந்தவர் ஜெரினா (23). இவருக்கு 13 வயதிலேயே திருமணம் நடந்தது. மற்றவர்களுடன் பேசுவது, இவரது கணவருக்கு பிடிக்கவில்லை. இதனால், அவர்களுக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு கடும் வாக்குவாதம் நடந்தது. இதில், ஆத்திரமடைந்த கணவன், ஜெரினாவை சரமாரியாக தாக்கி கை, கால்களை கட்டிப்போட்டார். பின்னர், அவரது 2 காதுகளையும் கத்தியால் வெட்டி எடுத்துவிட்டார்.

இதில், ஜெரினா அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். அதை பார்த்த கணவன், அங்கிருந்து தப்பிவிட்டார். பின்னர், படுகாயமடைந்த ஜெரினாவை மீட்டு, அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளிந்த ஜெரினா கூறியதாவது:-

நான் எந்த பாவமும் செய்யவில்லை. என் கணவர் ஏன் இப்படிச் செய்தார் என்று எனக்கு தெரியவில்லை. எனக்கும், என் கணவருக்கும் இடையிலான உறவு நல்ல நிலையில் இல்லை.

என் கணவர் ஒரு சந்தேக வியாதி பிடித்தனர். எனது பெற்றோரை பார்க்க அனுமதிக்காமல், என்னை தடுத்து வந்தார். இனியும் தனது கணவருடன் திருமண வாழ்க்கையை தொடர எனக்கு விருப்பமில்லை.

எப்போது நான் பெற்றோர் வீட்டுக்கு செல்ல விரும்பினாலும், வேறு ஆண்களுடன் நான் பேசுவதாக நினைத்து, என் மீது சந்தேகப்படுவார். என்னை இந்த அளவுக்கு கொடுமை செய்த, கணவனுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். அவரை போலீசார் கைது செய்ய வேண்டும் என்றார்.

PREV
click me!

Recommended Stories

தண்ணீர் இல்ல அது விஷம்.. இந்தூர் விவகாரத்தில் பாஜக-வை வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி
600 கிலோ எடை.. 400 கிலோவை குறைச்சு சாதிச்ச மனுஷன்.. கடைசியில இப்படி ஆகிடுச்சே!