இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச விசாவை மேலும் 14 நாட்கள் நீடித்தது சிங்கப்பூர் அரசு
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச விசாவை மேலும் 14 நாட்கள் நீடித்தது சிங்கப்பூர் அரசு
இலங்கையி்ன் பொருளாதாரச் சீரழிவுக்கு காரணமான அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச இருவருக்கும் எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தால் பதவி விலகினர்.
மக்கள் போராட்டத்துக்கு அஞ்சி, கடந்த 13ம் தேதி இலங்கையிலிருந்து மாலத்தீவுக்கு கோத்தபய ராஜபக்ச குடும்பத்துடன் தப்பினார்.
இனி QR Code முறை.. இலங்கை எரிபொருள் ஒதுக்கீட்டில் அதிரடி மாற்றம் - அமைச்சர் அதிரடி உத்தரவு !
மாலத்தீவுகளில் இருந்து, சிங்கப்பூருக்கு கோத்தபய ராஜபக் சென்றுவிட்டார். சிங்கப்பூர் அரசிடம் அடைக்கலம் வந்திருப்பதாக முதலில் தகவல் வெளியானது. இதை மறுத்த சிங்கப்பூர் அரசு கோத்தபய ராஜபக்சவுக்கு 14 நாட்கள் விசா வழங்கியுள்ளோம். இந்த விசா காலம் நாளை(28ம்தேதி) முடியவடைய இருந்தது.
சிங்கப்பூரில் அடைக்கமாக கோத்தபய ராஜபக்ச வரவில்லை என்பதால், அவர் இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இலங்கை திரும்புகிறார் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச
இது தொடர்பாக இலங்கை அமைச்சரவை செய்தித்தொடர்பாளர் குணவர்த்தனாவிடம் நேற்று அளித்த பேட்டியில் “ முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச எந்த நாட்டிலும் மறைந்திருக்கவில்லை. அவர் சிங்கப்பூரிலிருந்து வருவார் என எதிர்பார்க்கிறோம். இலங்கையை விட்டு கோத்தபய ராஜபக் தப்பிவிட்டார் மறைந்து வாழ்கிறார் என்பதை நான் நம்பவில்லை” எனத் தெரிவித்தார்.
கோத்தபய ராஜபக்சே தப்பிக்க உதவிய தமிழர்...??? வெளியான பரபரப்பு தகவல்.
இந்நிலையில் சிங்கப்பூரில் தங்கியிருக்கும் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு மேலும் 14 நாட்கள் விசாவை நீட்டித்து சிங்கப்பூர் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.