இந்த ஊசி போட்டால் மட்டுமே கொரோனா வைரஸ் வராது என்று சொல்வார்கள். மக்கள் பணத்தை எடுத்து நாம் பெரிய பெரிய மருந்து கம்பெனிகளிடம் கொடுப்போம்.
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டு உலகம் முழுவதும் பரவி பெறும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. 192 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு நேற்று ஒரே நாளில் 1,634 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 14,687ஆக உயர்ந்துள்ளது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. உலகம் முழுவதும் 3 லட்சத்து 38 ஆயிரத்து 724 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தினமும் பலியானவர்களின் எண்ணிக்கை 13 சதவீதம் அதிகரித்து வருகிறது.
தற்போது இத்தாலியில் கொரோனா கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் சீனாவை விட இத்தாலியில் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் 651 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆயிரத்து 576ஆக உயர்ந்தது. மேலும் புதிதாக 5 ஆயிரத்து 560 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்து 138ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவிலிருந்து தப்பிக்க மக்கள் அலறியடித்து வருகின்றனர். கொரோனா வைரஸின் பின்னணி என்ன? பரப்பி விட்டது யார்? யாருக்கு நஷ்டம்? சீனாவைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் சில நாட்களுக்கு முன் முக்கியமான பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். டுவிட்டரிலும் அவர் பதிவு செய்துள்ளார். அதில்,’கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து வந்தது கிடையாது. அமெரிக்காக்காரர்கள் தான் இங்கே பரப்பி இருக்கிறார்கள் என்கிற சந்தேகம் இருக்கிறது’என அவர் தெரிவித்து இருந்தார்.
இது உண்மைதானா? என ஆய்வு செய்து பார்க்கும்போது மார்ச் 11ஆம் தேதி சி.டி.சி எனப்படும் யுஎஸ் சென்டர் பார் தீசிஸ் கண்ட்ரோல் அதாவது அமெரிக்காவில் எந்தெந்த நோய் எப்படி பரவுகிறது. அதை எப்படி தடுக்க வேண்டும் என்பதை ஆராயும் ஒரு அமைப்பு ஒரு தகவலை வெளியிட்டு இருந்தது. சி.டி.சி அந்த அமைப்பைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் அமெரிக்க பாராளுமன்றத்தில் பேசும்போது, ’’நம் நாட்டில் நிறைய இழப்புகள் வந்தது. அந்த இழப்புகள் எல்லாம் சீசன் ப்ளூ காரணமாக வந்தது கிடையாது. ஆனால், அந்த இழப்புகள் கொரோனா வைரசால் இறந்திருக்கிறார்கள்.
சீசன் ப்ளூ தொடங்கி கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு மேலாகிறது. அமெரிக்காவில் இந்த சீசன் ப்ளூ தாக்கத்தால் இப்போதுவரை 16,000 நபர்கள் இறந்திருக்கிறார்கள். கொரோனா வைரஸால் இதுவரை உலகம் முழுவதும் 7 ஆயிரம் பேருக்கு மேல் இறந்திருக்கிறார்கள். அதாவது ’உலகத்தில் இருக்கும் எல்லா மனிதர்களும் பயப்படுங்கள்’என்கிற அளவுக்கு இந்த நோய்த்தொற்றை அறிவித்துவிட்டார்கள். ஆனால், அமெரிக்காவில் 16 ஆயிரம் பேர் இறந்திருக்கிறார். ஐந்து மாதங்களுக்கு முன்பாகவே அங்கே இழப்புகள் நடைபெற்று வருகிறது. ஆனால், எதற்காக இருந்தார்கள் என்கிற காரணம் புரியாமல் இருந்தது. இப்போது அவர்கள் கொரோனா வைரஸால்தான் இறந்துள்ளார்கள் என்பதை கண்டுபிடித்து விட்டோம்’ என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
அவர்களது இறப்பு சான்றிதழில், இறப்புக்கு காரணமாக கொரோனா வைரஸ் தாக்கம் எனக் கூறப்பட்டுள்ளது. இறந்தவர்களின் உறவினர்களிடம் அந்த சான்றிதழை கொடுக்கும்போது, இறப்புக்கு காரணம் சீசன் ப்ளூ வைரஸ் என கூறி வந்தீர்கள். இறப்புச் சான்றிதழில் கொரோனா வைரஸ் என்று கூறப்பட்டுள்ளது’ எனக்கூறி அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுத்து வந்தனர். இந்த விவகாரத்தில் அமெரிக்க அரசுக்கு எதிராக வழக்கு தொடுக்கப் போகிறோம் என்று பலரும் கிளப்பி வருகின்றனர். இதனால் அமெரிக்க அரசாங்கம் சிக்கலில் உள்ளது.
தென்கொரியாவில் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் சோதனை நடத்தப்படுகிறது. ஆனால், அமெரிக்காவில் இந்த மூன்று மாதத்தில் வெறும் 12 ஆயிரம் நபர்களுக்கு மட்டுமே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் சோதனை செய்வதற்கான கருவிகளில் போலிகளை உருவாக்கி அதன் மூலம் அமெரிக்கா சோதனை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த தகவல் எல்லாம் அந்நாட்டு முக்கிய நாளிதழ்களில் செய்திகளாக வெளிவந்தவை. அந்த சோதனை செய்யும் கருவிகள், உண்மையில் ஒருவருக்கு வைரஸ் தொற்று இருந்தாலும், இல்லை என்றே காண்பிக்கும்.
ஆக மொத்தத்தில் சீனா நாட்டுக்காரர்கள் சொன்னதில் உண்மை இருக்கிறது. கொரோனா வைரஸ் அமெரிக்காவிலிருந்து சீனாவிற்கு போயிருக்க வேண்டும். அதன்பிறகுதான் சீனாவில் வைரஸ் தொற்று நடைபெற்றிருக்க வேண்டும். அமெரிக்காவைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர் சொல்படி சீனாவில் இருந்து இந்த நோய்த் தொற்று பரவியிருக்கிறது. எனவே எங்களுடைய நாட்டில் நாங்கள் எமர்ஜென்சி ஏற்படுத்துகிறோம் என்கிற அறிவிப்பை கொடுத்திருக்கிறார்கள். இந்தியாவும் எமர்ஜென்சி அறிவித்திருக்கிறது.
நாம் இதில் ஒன்றை கவனிக்க வேண்டியது உள்ளது. சீனாவில் வுகானில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அங்கு உருவாக்கப்படவில்லை. ஆனால், சீனாவிலிருந்து உருவானதாக அனைவரும் கூறுகிறார்கள். அதிகாரம் படைத்த ஒரு நாட்டைச் சேர்ந்தவர்கள் சொல்வது தலைப்புச் செய்தியாக, முக்கிய செய்தியாக இடம் பெற்றுவிடுகிறது.
ஒரு வைரஸ் வரும். கிட்டத்தட்ட உலக அளவில் 65 கோடி மக்கள் இறந்து போவார்கள். 15% பங்குசந்தைகள் நஷ்டமடையும். மிகவும் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள் அக்டோபர் மாதம் உலக பொருளாதார அமைப்பு கூறியிருந்தது. அடுத்து டிசம்பரில் அந்த வைரஸ் வருகிறது. உலக பொருளாதார அமைப்பு எச்சரித்த அதே அக்டோபர் மாதம்தான் 300-க்கும் மேற்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் சீனாவில் உள்ள வுகானுக்கு சென்றனர். அங்கு ஒரு மாதம் தங்கி இருந்தார்கள். அவர்கள் அங்கு சென்ற பிறகு சீனாவில் இப்படி ஒரு வைரஸ் வந்ததாக சொல்கிறார்கள். டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் சீனாவில் மட்டுமே பரவி கொண்டிருந்த இந்த கொரோனா வைரஸ் திடீரென வேகமெடுத்து உலக நாடுகளுக்கு பரவியது.
நாம் கொரோனா வைரஸ் பற்றி அதிகமாக மார்ச் முதல் தேதியிலிருந்து தான் பல விஷயங்களை கேள்விப்பட்டு வருகிறோம். இரண்டு மாதங்களாக சீனாவில் மட்டுமே பரவி கொண்டிருந்த இந்த கொரோனா வைரஸ் திடீரென வேகம் எடுக்க எடுத்து இத்தாலியை சின்னாபின்னமாக்கி விட்டது. ஈரானை பதம் பார்த்து விட்டது.
இத்தாலியில் மிகப்பெரிய ஒரு புரட்சி நடந்தது. அங்கு கட்டாயமாகக் 9வாக்சின்) தடுப்பூசி போட வேண்டிய ஒரு சட்டம் இயற்றப்பட்டது. அப்போது நிறைய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ள மாட்டோம் என்று கூறி எதிர்த்தார்கள். அதன்பிறகு அந்த அரசாங்கம் 300 குழந்தைகளை ஒதுக்கி வைத்து உங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடவில்லை என்றால் இந்த நாட்டில் படிக்க வைக்க முடியாது. அரசு உதவிகள் கிடைக்காது என மிரட்டியது. அதனை எதிர்த்து மக்கள் அங்கே போராட்டம் நடத்தினர். அதன்பிறகு அங்கே அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தது. கட்டாய தடுப்பூசி சட்டம் அங்கிருந்து அகற்றப்படுகிறது. உலகின் கனவுத் திட்டமான பட்டுப்பாதை திட்டத்தில் முதல் கையெழுத்து போட்ட நாடு இத்தாலி. அதற்காகவும் அங்கு இந்த கொரோனா பரப்பப்படுதற்கு முக்கிய காரணம். அடுத்து ஈரானை இந்த கொரோனா வைரஸ் கடுமையாக தாக்கியது. இதற்கு காரணம் இருக்கிறது. ஈரானில் ஆட்சி மாற்றத்தை கொண்டுவர அமெரிக்கா முப்பது ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. எதுவுமே நடக்கவில்லை. இப்போது நாம் இணையதளத்தில் கொரோனா வைரஸ் ஈரான் பாராளுமன்றம் என்று தேடினால் 15% ஈரான் பாராளுமன்றத்தில் இருக்கும் அத்தனை அதிகாரிகளுக்கும் இந்த வைரஸ் பரவி இருக்கிறது. அது எப்படி சாத்தியமானது? திடீரென பாராளுமன்றத்தி இருக்கும் அத்தனை நபர்களுக்கும் இந்த வைரஸ் பரவியது எப்படி?
அப்படியானால் அந்த வைரஸ் சக்தி ஒரு குறிப்பிட்ட இடங்களில் மட்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வளர்ந்த நாடு அமெரிக்கா. வளர்ந்த நாடு ஜப்பான். அமெரிக்காவில் கட்டாய தடுப்பூசி என்பது இருக்கிறது. கர்ப்பமாகும்போது கர்ப்பத்துக்கு முன்பு, குழந்தை பிறந்த போது, குழந்தை பிறந்ததற்கு பிறகு... இப்படி பலதரப்பட்ட தடுப்பூசிகள் இருக்கின்றன. ஜப்பானில் இந்த தடுப்பூசி கண்டிப்பாக போட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. குழந்தைகளின் இறப்பு விகித பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது அமெரிக்காதான். குழந்தைகள் இறப்பு விகிதம் அமெரிக்காவில் கூடுதல். அப்படி பிறக்கும் குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஏதோ ஒரு நோயால் பாரம்பரியமான ஒரு நோய் தொற்றில் விழுந்து விடுகிறார்கள். ஆட்டிசம் கூடுதலாக வருகிறது. புதுப்புது விதமான நோய்கள் வருகிறது. கேன்சர் அதிகரிக்கிறது. இது எல்லாமே அமெரிக்காவில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்.
ஆனால், ஜப்பானில் குழந்தைகள் இறப்பு விகிதம் ரொம்பவே குறைவு. இன்னொரு விஷயம் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதும் ஜப்பான் நாட்டவர்கள்தான். ஆகையால் இந்த தடுப்பூசிகள் என்பது நல்லது செய்கிறதா? கெட்டது செய்கிறதா? என்பதை அமெரிக்கா- ஜப்பான் ஒப்பீடு மூலம் நாம் அறிந்துகொள்ள முடியும். கொரோனா வைரஸ் இப்போது உலக நாடுகளை மிகவும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. எங்கிருந்து பரவியது என ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. ஆனால், அதைவிட முக்கியமாக இந்த நோய் தங்களை தாக்கி விடக்கூடாது என்பதில் மக்கள் கவனமாக இருந்து வருகின்றனர். அப்படி கவனம் செலுத்தும் போது சில உண்மைகள் மறைக்கப்படுகின்றன.
உலகின் முக்கியமான மருந்து கம்பெனிகள் கொரோனா வைரஸை தடுப்பதற்கான மருந்துகளை தயாரிக்க போகின்றன. அந்த மருந்துக்கு பத்து டாலர்கள் விலை சொன்னாலும் அதை வாங்கி பயன்படுத்த மக்கள் தயாராகி விட்டனர். பல கோடிகளை கொட்டி அந்த மருந்துகளை வாங்குவார்கள். இந்தியாவும் வாங்கும். இந்த ஊசி போட்டால் மட்டுமே கொரோனா வைரஸ் வராது என்று சொல்வார்கள். மக்கள் பணத்தை எடுத்து நாம் பெரிய பெரிய மருந்து கம்பெனிகளிடம் கொடுப்போம். இந்த நாட்டை, இந்த உலகத்தை யார் கண்ட்ரோல் செய்ய நினைக்கிறார்களோ அவரிடம் அந்த பணம் போய் சேரும். அப்படி கட்டாய தடுப்பூசி கொடுக்கப்பட்ட நபர்களுடைய அடையாளம் அங்கே பாதுகாக்கப்படும். ஐடி எனக் கூறப்படும் இந்த அடையாளத்தை அவர்கள் வைத்து மக்களை இரண்டு விதமாக கொல்ல முடியும்.
பெரிய பெரிய இயற்கை பேரிடர், யுத்தம் வழியாக சக மனிதர்களை கொல்வது ஒரு வகை. தடுப்பூசிகள் வழியாக வைரஸ்கள் வழியாக கொஞ்சம் கொஞ்சமாக கொல்வது இன்னொரு வகை. நமக்கு கொடுக்கப்படும் தடுப்பூசி வழையாக ஏதாவது ஒரு மூலப் பொருட்களை சேர்த்திருந்தால் பத்து வருடத்திற்கு பிறகு அவனை கொன்று குவிக்க வேண்டும் என்று அந்த மருந்து கம்பெனிகள் நினைத்தால் அதை யாரால் தடுக்க முடியும்? எல்லோரும் அந்த நோய் குணப்படுத்த வேண்டும் என இந்த தடுப்பூசி போடுவோம். ஆனால், அந்த தடுப்பூசியால் ஏற்படக்கூடிய பின் விளைவுகள் என்ன? என்பதை நம்முடைய இந்திய அரசாங்கம் மட்டுமல்ல, ஒவ்வொரு அரசாங்கமும் நாம் கொரோனா வைரஸுக்கு எடுத்துக்கொள்ளும் தடுப்பூசியில் பின் விளைவுகள் ஏதுமில்லை என்று சோதித்த பிறகு, நிரூபித்த பிறகு அந்த மருந்துகளை நமது குடிமக்களுக்கு போட அனுமதிக்க வேண்டும்.
அதைவிடுத்து உடனடியாக இந்த வைரஸ் போக வேண்டுமென்றால் இந்த தடுப்பூசி போட வேண்டும் என்கிற ஒரு எமர்ஜென்சி நிலையை உருவாக்கக் கூடாது. யாரோ ஒருவர் சம்பாதிக்க, கண்ட்ரோலில் வைத்துக் கொள்ள நமது மக்களை பலிகடா ஆக்கக்கூடாது.