ஆஸ்திரேலியா அருகே அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் !! சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பீதி !!!

 
Published : Nov 20, 2017, 09:14 AM ISTUpdated : Sep 19, 2018, 01:28 AM IST
ஆஸ்திரேலியா அருகே அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் !! சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பீதி !!!

சுருக்கம்

earthquake in astrelia

ஆஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியில் உள்ள நியூ கலிடோனியா அருகே உள்ள தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 7.0 ஆக பதிவாகி உள்ளது.

ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில்  உள்ள நியூ கலிடோனியா, வானுயாடு உள்ளிட்ட தீவுப்பகுதியில்  இன்று காலை ஆஸ்திரேலிய  நேரப்படி காலை 9.43 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவாகியுள்ளது.

இதையடுத்து நியூ கலிடோனியா மற்றும் அதன் அருகே உள்ள வானுயாடு உள்ளிட்ட தீவுகளை சிறிய அளவிலான சுனாமி அலைகள் தாக்கி உள்ளன. இதனால் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், தீவிர சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் கடற்கரையை ஒட்டிய 300 கி.மீ., பகுதிகளை சுனாமி அலைகள் தாக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 12 மணி நேரத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலஅதிர்வு இது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்த உடனடி தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

 

PREV
click me!

Recommended Stories

அமெரிக்கா போனா திரும்ப முடியாதா.? கூகுள்–ஆப்பிள் எச்சரிக்கை.. அதிர்ச்சி செய்தி
எப்ஸ்டீன் வழக்கில் புதிய திருப்பம்.. காணாமல் போன டிரம்ப் புகைப்படம்.. வெளியான முக்கிய ஆதாரம்