சக்தி வாய்ந்த ஆயுதங்கள் எங்களிடம் இருக்கு !! ஒழுங்கா இருங்க !! ஈரானை தெறிக்கவிட்ட டிரம்ப் !!

By Selvanayagam PFirst Published Jan 8, 2020, 9:49 AM IST
Highlights

ஈராக்கிலுள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியுள்ள நிலையில்  எங்களிடம் சக்தி வாய்ந்த ஆயுதங்கள் உள்ளன ஒழுங்கா இருங்க என ஈரான் அரசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்., .

ஈரானுடன் அமெரிக்கா தொடர்ந்து விரோதப்போக்கை கடைப்பிடித்து வருகிறது. இந்த நிலையில் ஈராக் தலைநகர் பாக்தாத் வந்திருந்த இடத்தில், ஈரான் படைத்தலைவர் காசிம் சுலைமானியை,  அமெரிக்கா அதிரடியாக வான்தாக்குதல் நடத்தி கொன்றது .உலக அரங்கை அதிர வைத்துள்ளது. 

இதனால், அமெரிக்கா, ஈரான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில், ஈராக்கின் அல் அசாத் பகுதியில் உள்ள  அமெரிக்க படைகள் உள்ள ராணுவ தளம்  மீது  மீது ஈரான் ராக்கெட் தாக்குதல் நடத்தியது. 10-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது.  

தாக்குதல் நடத்தப்பட்டதை அமெரிக்காவும் உறுதி செய்துள்ளது.  ஈரானின் தாக்குதலில் சேதம் ஏற்பட்டதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.  அமெரிக்காவுக்கு பதிலடியாக ஈரானும் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதால்,  மத்திய கிழக்கு நாடுகளில் உச்ச கட்ட பதற்றம் நிலவுகிறது.  

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்ட டுவிட்டர்  பதிவில், “ 2 அமெரிக்க தளங்கள் மீது ஈரானில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலால் ஏற்பட்ட சேதம் குறித்து ஆய்வு நடப்பதால் நாளை அறிக்கை வெளியிடுகிறேன். மிகவும் சக்தி வாய்ந்த அதி நவீன ஆயுதங்கள் எங்களிடம் இருக்கின்றன. ஆல் இஸ் வெல்” என்று  பதிவிட்டுள்ளார்.

click me!