ஈரான் மக்கள் ட்ரம்புக்கு வந்த திடீர் பாசம்...!! பாவத்திற்கு பரிகாரம் தேடும் அமெரிக்கா..!!

By Ezhilarasan BabuFirst Published Jan 13, 2020, 1:06 PM IST
Highlights

ஈரான்தான் இதற்கு காரணம் என உக்ரைன் குற்றம் சாட்டியது, ஆனால்  ஆரம்பத்தில் அதை  இல்லை என மறுப்பு தெரிவித்த ஈரான் பின்னர்  சர்வதேச அளவில் எழுந்த அழுத்தம் காரணமாக,   

ஈரான் நாட்டு அரசின் நடவடிக்கையை கண்டித்து  அந்நாட்டு மக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதை பாராட்டுகிறேன் என்ன அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.  கடந்த வாரம் ஈராக்கிலுள்ள பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்கா நடத்திய தாக்குதலில் அமெரிக்க புரட்சிப் படையின் ராணுவ தளபதி காசிம் சுலைமான் கொல்லப்பட்டார் .  இதனையடுத்து  அமெரிக்காவை பழிதீர்க்க  முடிவு செய்த ஈரான் ,   ஈராக்கில் உள்ள அமெரிக்க விமானப் படைத்தளத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது .

 

இதில் 80 அமெரிக்க ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் ஈரான் தெரிவித்தது .  இந்த தாக்குதலை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்தது  இரு நாட்டு மோதல்  மூன்றாவது உலகப்போருக்கு இட்டுச் சென்று விடுமோ.  அன்ற அச்சம் சர்வதேச நாடுகள் மத்தியில்  ஏற்பட்டிருந்த  நிலையில் ,  தாங்கள் போரை விரும்பவில்லை என அமெரிக்க அதிபர்  வெளிப்படையாக அறிவித்தார் .  இதற்கிடையே கடந்த புதன்கிழமை உக்ரைன் பயணிகள் விமானத்தை அமெரிக்க போர் விமானம் எனக்கருதி ஈரான் சுட்டு வீழ்த்தியது . அதில் பயணித்த சுமார் 176 பேர் உயிரிழந்தனர் . ஈரான்தான் இதற்கு காரணம் என உக்ரைன் குற்றம் சாட்டியது, ஆனால்  ஆரம்பத்தில் அதை  இல்லை என மறுப்பு தெரிவித்த ஈரான் பின்னர்  சர்வதேச அளவில் எழுந்த அழுத்தம் காரணமாக, 

  

அமெரிக்காவின் விமானம்  என்று கருதி தவறுதலாக சுட்டு தாங்கள்தான்  என வருத்தம் தெரிவித்தது .  இந்நிலையில் ஈரான் அரசின் இச்செயலை கண்டித்து அந்நாட்டு  மக்கள் அரசுக்கு எதிராக  மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர் .  இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப்,  ஈரான் மக்களின் தைரியத்தை பாராட்டுகிறேன் , அவர்கள் நீதியின் பக்கம் நிற்கின்றனர்  போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களை உலகமே  பார்த்துக்கொண்டிருக்கிறது போராட்டத்தை கட்டுப்படுத்துவதாக கூறி மக்களை ஒடுக்க வேண்டாம் என அமெரிக்கா ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது  குறிப்பிடத்தக்கது . 
 

click me!