சிங்கப்பூர் வேலைக்குப் போறீங்களா? முதலில் இதைத் தெரிஞ்சு வைச்சுக்கோங்க!

By SG Balan  |  First Published Jun 24, 2023, 11:14 PM IST

சிங்கப்பூர் வருபவர்களுக்கு அந்நாட்டு அரசு வயது வரம்பு அடிப்படையில் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. ஏற்கெனவே சிங்கப்பூரில் வேலை பார்த்தவராக இருந்தால் அனுமதி கிடைக்க வாய்ப்பு அதிகம்.


சிங்கப்பூர் வருவதற்கான வயது வரம்பு உள்ளது. ஏற்கெனவே வேலை நிமித்தமாக சிங்கப்பூர் சென்றுவிட்டு இந்தியா திரும்பியவராக இருந்தால், மறுபடியும் சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்றால், அதற்கும் முக்கியமான வயதுக் கட்டுப்பாடு உள்ளது. இவை குறிந்து விரிவாகப் பார்க்கலாம்.

சிங்கப்பூரில் உள்ள மனிதவள அமைச்சகம் வெளிநாட்டு ஊழியர்கள் அந்நாட்டில் பணிபுரிவதற்கான விதிமுறைகளை நிர்ணயம் செய்துள்ளது. அந்த அமைச்சகம் வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்களுக்கு வயது வரம்பு வைத்துள்ளது. அங்கு உள்ள நிறுவனங்கள் வேலைக்கு ஆட்களைத் தேர்வு செய்ய, இந்த மனிதவள அமைச்சகத்தின் மூலம்தான் விண்ணப்பிக்க வேண்டும்.

Latest Videos

undefined

வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கவேண்டிய சராசரி ஊதியம், அவர்களுடைய தேவைகள், வயது வரம்பு போன்ற பல விதிமுறைகளை மனிதவள அமைச்சகம் தீர்மானிக்கிறது. இந்த விதிகளின்படி, அமைச்சகத்தின் அனுமதி கிடைத்தால் மட்டுமே சிங்கப்பூருக்குச் செல்ல முடியும்.

ஒட்டுமொத்த நாட்டையும் ஆபத்தில் தள்ளும் அரசு: இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

வெளிநாட்டினர் சிங்கப்பூருக்கு வருவதற்கான வயது வரம்பு 55 ஆக நிர்ணயித்துள்ளது. வேலை உரிமத்துடன் சிங்கப்பூர் வரும் செல்லும் நபர்கள் 50 வயதுக்குள் இருக்கவேண்டும். 50 வயதுக்கு மேல் ஆனவர்களாக இருந்தால் சிங்கப்பூருக்குச் செல்ல அனுமதி கிடைக்காது.

ஆனால், ஏற்கனவே நீங்கள் சிங்கப்பூரில் பணிபுரிந்த அனுபவம் உடையவர் என்றால், ஐம்பது வயதைத் தாண்டியவராக இருந்தாலும் திரும்ப அனுமதி கொடுக்கப்படும். ஆனால், சிங்கப்பூர் நிறுவனங்கள் அதிக வயதான நபர்களை வேலைக்கு எடுப்பதற்கே மிகவும் யோசிக்கின்றன. அதிகமான பணி அனுபவம் இருப்பவர்களுக்கு அதிகமாக சம்பளம் கொடுக்கவேண்டி இருக்கும் என்று நினைக்கிறார்கள்.

அதிக வயதானவர்களுக்கு மருத்துவப் பரிசோதனையில் ஏதேனும் பிரச்சினை வந்து அமைச்சகத்தின் அனுமதி கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது. எனவே இளமையும் திறமையும் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க அதிகமாக விரும்புகிறார்கள். U-Turn Worker எனப்படும் வகையில் வரும், சிங்கப்பூரில் பணிபுரிந்து முன்அனுபவம் உள்ளவர் என்றால், மீண்டும் வேலை உரிமம் கிடைக்க 55 முதல் 60 வயது வரை இருக்கலாம். பணிக்குத் தேர்வு செய்யும் நிறுவனம் தலையிட்டால் வயது வரம்பு தளர்த்தப்படவும் வாய்ப்பு உண்டு.

புதிதாக சிங்கப்பூரில் பணிபுரிய வருபவர்கள் 51 வயதுக்கு உட்பட்டவராக இருக்கவேண்டும். அதற்கு மேல் வயதானவர்களுக்கு அனுமதி கிடைக்க சிங்கப்பூரில் உள்ள நிறுவனம் தலையிட்டு முயற்சி எடுத்தால் அனுமதி கிடைக்கக்கூடும்.

இனி சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு எளிதில் வேலை கிடைக்கும்.. வெளியான புதிய அறிவிப்பு..

click me!