தாவுத் இப்ராகிம் ரூ.15 ஆயிரம் கோடி சொத்துக்கள் பறிமுதல்!!!! மோடியின் ராஜ தந்திரத்துக்கு கிடைத்த வெற்றி

First Published Jan 3, 2017, 9:56 PM IST
Highlights


மும்பையில் கடந்த 1993ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 257 பேர் பலியாக தீவிரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்டவரும், முக்கியக் குற்றவாளியான தாவுத் இப்ராகிமுக்கு சொந்தமான ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பான சொத்துக்களை ஐக்கிய அமீரகம் அரசு பறிமுதல் செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம், ராஜதந்திரத்துக்கு கிடைத்த வெற்றியாகவே இதுபார்க்கப்படுகிறதல் கடந்த 1993ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 257 பேர் பலியானார்கள், 700-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்பில் மூளையாகச் செயல்பட்டவரும், முக்கியக் குற்றவாளியுமான தாவுத் இப்ராகிம்தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அவர், இப்போது பாகிஸ்தான் தலைமறைவாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. அங்கு ஆடம்பரமாக வாழ்ந்துவரும் தாவுத் இப்ராகிமுக்கு இந்திய, சவூதி அரேபியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருக்கின்றன.

இந்நிலையில், இவரைப் பிடிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மத்தியஅரசுமுயற்சிகளை மேற்கொண்டும் முடியவில்லை. இந்நிலையில், பிரதமர் மோடியும், இந்தியாவின் ‘ஜேம்ஸ் பாண்ட்’ என்று அழைக்கப்படும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்அஜித் தோவல் ஆகியோர் கடந்த ஆண்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டனர்.

இந்த பயணத்தின் போது மத்திய கிழக்கு நாடுகளில் ஏராளமான சொத்துக்களை வாங்கிக் குவித்துவைத்து இருக்கும் தாவுத் இப்ராகிமின் சொத்துக்களை முடக்கக் கோரி அந்நாட்டு அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர். அதன் தொடர்ச்சியாக இந்தியாவின் சார்பில் தாவூத் இப்ராகிம் சொத்துக்கள் அடங்கிய பட்டியலும் தரப்பட்டது. இந்த சொத்துக்கள் குறித்த பட்டியலை இந்தியாவின் ‘ரா’ அமைப்பும், உளவுத்துறையும் திரட்டின.

இதையடுத்து, சமீபத்தில், சவூதி அரேபியாவில் உள்ள தாவூத் இப்ராகிமின்சொத்துக்கள் குறித்து அந்நாட்டு அரசு அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியது. அந்த விசாரணையின் அடிப்படையில், சவூதி அரேபியாவில் உள்ள தாவுத்இப்ராகிமுக்கு சொந்தமான ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்களை அந்நாட்டு அரசு பறிமுதல் செய்துவிட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

குறிப்பாக துபாயில் செயல்பட்டு வரும் ‘கோல்டன் பாக்ஸ்’ என்ற நிறுவனத்தை தாவுத் இப்ராகிம்மின் இளைய சகோதரர் அனிஸ் இப்ராகிம் நடத்தி வருகிறார் அந்த நிறுவனத்தையும் அரசு பறிமுதல் செய்து விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன

தாவுத்துக்கு துபாய் தவிர்த்து, மொராக்கோ, ஸ்பெயின், ஐக்கிய அரசு அமீரகம், சிங்கப்பூர், தாய்லாந்து, சைப்ரஸ், இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் சொத்துக்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

click me!