உஷார் மக்களே.. இந்தியாவில் மே மாதத்திற்குள் 24 கோடி மக்களுக்கு கொரோனா பரவ வாய்ப்பு.? எச்சரிக்கும் ஆய்வறிக்கை.!

Published : Mar 30, 2020, 11:09 AM IST
உஷார் மக்களே.. இந்தியாவில் மே மாதத்திற்குள் 24 கோடி மக்களுக்கு கொரோனா பரவ வாய்ப்பு.? எச்சரிக்கும் ஆய்வறிக்கை.!

சுருக்கம்

இந்தியாவில் மே மாதம் இறுதிக்குள் 24 கோடி பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்ட வாய்ப்புள்ளதாகவும், உத்தரபிரதேசம், மகாராஷ்ரா, டெல்லி, கேரளா மிக மோசமாக பாதிக்கப்படும் எனவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம் இந்த பகீர் தகவலை தெரிவித்துள்ளது. எனினும் இதை அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் ஏற்கவில்லை.

இந்தியாவில் மே மாதம் இறுதிக்குள் 24 கோடி பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்ட வாய்ப்புள்ளதாகவும், உத்தரபிரதேசம், மகாராஷ்ரா, டெல்லி, கேரளா மிக மோசமாக பாதிக்கப்படும் எனவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம் இந்த பகீர் தகவலை தெரிவித்துள்ளது. எனினும் இதை அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் ஏற்கவில்லை.

வாஷிங்டன்னில் இருந்து செயல்படும் (The centre for disease dynamics economics&policy) என்ற அமைப்பின் சார்பில் வேகம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக தொற்றாக ஏற்கனவே பறவ தொடங்கிவிட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்ட நிலையில் ஊரடங்கு உத்தரவு தாமதமாக பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் குறைந்தபட்சம் 15 கோடி பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

கொரோனா பரவும் வேகம் 3 விதங்களில் கணிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சமுதாய விலகலை முறையாக கடைப்பிடிக்காத நிலையில், கொரோனா வைரஸ் மிகவேமாக பரவுகிறது. இதனால் ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சமாக 25 கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் அரசின் உத்தரவுகள் முறையாக கடைப்பிடிக்கப்படாவிட்டால் மே மாதம் இறுதியில் சுமார் 12 கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், நடுத்தரமாக கொரோனா தொற்று பரவினால் மே மாதம் தொடக்கத்தில் 20 கோடி பேருக்கு தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆய்வு கூறுகிறது. இந்தியாவில் 25 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாலும் அனைவரையும் மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய அவசியம் இருக்காது. 

அதாவது சுமார் 25 லட்சம் பேரை மட்டுமே மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும் என்றும் ஆய்வு கூறுகிறது.  கொரோனா தெற்று வேகமாக பரவும் அபாயம் இந்தியாவில் இருப்பதால் பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என ஆய்வறிக்கை யோசனை தெரிவித்துள்ளது. அதாவது நோய் தொற்று உள்ளவர்களை கண்டறிந்து விரைவாக தனிமைப்படுத்துவதன் மூலம்  மற்றவர்களுக்கு வைரஸ் பரவுவதை தவிர்க்க முடியும். ஊரடங்கு உத்தரவால் நாட்டில் உற்பத்தி மற்றும் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டு பசி கொடிமை அதிகரிக்கும் எனவும் ஆய்வறிக்கை எச்சரிக்கிறது. 

எனவே, ஊரங்கை பகுதியாக அமல்படுத்தவும், சமூக விலகலை கண்டிப்புடன் அமல்படுத்தவும் வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. CDDEP(The centre for disease dynamics economics&policy)வெளியிட்ட அறிக்கையை அமெரிக்காவில் புகழ்பெற்ற ஜான் ஹெக்கிஸ் பல்கலைக்கழகம் பேராசிரியர் ஒருவரும், ஆராய்ச்சி மாணவர்கள் ஒருவரும் இணைந்து எழுதியுள்ளனர். ஆனால், இதுதொடர்பாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் கூறுகையில் ஆய்வறிக்கைக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என மறுத்துள்ளது. 

PREV
click me!

Recommended Stories

ஜப்பானை உலுக்கிய 7.5 ரிக்டர் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு!
பாக். ஆதரவுடன் ஜெய்ஷ், லஷ்கர் பயங்கரவாதிகள் ரகசிய சந்திப்பு! இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி!