சீன நாட்டின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் முதன்முதலில் பரவிய கொரோனா வைரஸ் அந்நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பிற்கு அந்நாட்டில் இதுவரை 213 பேர் உயிரிழந்துள்ளனர். 9,692 பேருக்கு வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் தாதய்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் உலக நாடுகள் பீதி அடைந்துள்ளனர். இதனால், பல்வேறு பகுதியில் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புள்ள இடங்களில், சிக்கியிருக்கும் தங்கள் நாட்டைச் சேர்ந்த 800 மாணவர்களை மீட்டுகப்போவதில்லை என பாகிஸ்தான் அதிரடியாக அறிவித்துள்ளது.
சீன நாட்டின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் முதன்முதலில் பரவிய கொரோனா வைரஸ் அந்நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பிற்கு அந்நாட்டில் இதுவரை 213 பேர் உயிரிழந்துள்ளனர். 9,692 பேருக்கு வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் தாதய்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் உலக நாடுகள் பீதி அடைந்துள்ளனர். இதனால், பல்வேறு பகுதியில் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள வுகான் நகரில் கல்வி பயிலும் வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரை அந்தந்த நாடுகள் விமானம் மூலம் சொந்த நாட்டிற்கு அழைத்துசெல்லும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக அந்நகரில் தங்கியிருந்த 206 ஜப்பானியர்களை அந்நாட்டு அரசு தனி விமானம் மூலம் சொந்த நாட்டிற்கு அழைத்து சென்றுள்ளது. அதேபோல் இந்தியாவும் தங்கள் நாட்டை சேர்ந்தவர்களை மீட்க தேவையான முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. மேலும், வெளிநாடுகள் உள்ள தங்கள் நாட்டு மாணவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள 800 பாகிஸ்தான் மாணவர்களை திரும்ப அழைக்கமாட்டோம் என அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் பிரதமரின் நேரடி சிறப்பு சுகாதார ஆலோசகர் சபீர் மிஸ்ரா கூறியதாவது:- சீனாவில் உள்ள பாகிஸ்தானியர்களின் நலனே எங்களுக்கு முக்கியம். நாடு, உலகம் ஆகியவற்றின் நன்மை கருதியே வுகானில் இருந்து பாகிஸ்தானியர்களை மீட்காமல் உள்ளோம். இதைத்தான் உலக சுகாதார அமைப்பும் சொல்கிறது. இதுதான் சீனாவின் கொள்கையாகவும் உள்ளது. இதுதான் பாகிஸ்தானின் கொள்கையும் ஆகும். சீனாவுடனான எங்களது ஒருமைப்பாட்டை இதன் மூலம் நாங்கள் வெளிப்படுத்துகிறோம் என தெரிவித்துள்ளார்.