உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,006,232 சென்றுவிட்டது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,006,232 சென்றுவிட்டது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் உள்ள ஒரு சந்தை பகுதியில் இருந்து கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் தற்போது 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை குணப்படுத்தும் வகையிலான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் இந்த வைரஸ் தாக்கமும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ள போதும் அதன் விரீயம் சற்றும் குறையாமல் உயிரிழப்பு அதிகரித்த வண்ணமே உள்ளது.
இந்நிலையில், உலகம் முழுவதும் இதுவரை 3,006,232 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். இதுவரை 207,265 உயிரிழந்துள்ளனர். 883,238 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளின் விவரங்கள் பின்வருமாறு:-
உலகிலேயே அதிகபட்சமாக, அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் இதுவரை 9,87,322 பேர் பாதிப்படைந்துள்ளனர். 55,415 பேர் உயிரிழந்துள்ளனர். 118,781 குணமடைந்துள்ளனர். கவலைக்கிடமாக 15,143 பேர் உள்ளனர்.
2வது இடத்தில் ஸ்பெயின் நாடு உள்ளது, அங்கு கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 226,629ஆக உள்ளது. இதுவரை 23,190 பேர் உயிரிழந்துள்ளனர். 117,727 குணமடைந்துள்ளனர். கவலைக்கிடமாக 7,764 பேர் உள்ளனர்.
3வது இடத்தில் இத்தாலி நாடு உள்ளது. அங்கு கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 197,675ஆக உள்ளது. இதுவரை 26,644 பேர் உயிரிழந்துள்ளனர். 64,928 குணமடைந்துள்ளனர். கவலைக்கிடமாக 2,009 பேர் உள்ளனர்.
4வது இடத்தில் பிரான்ஸ் நாடு உள்ளது. அங்கு கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 162,100ஆக உள்ளது. இதுவரை 22,856 பேர் உயிரிழந்துள்ளனர். 44,903 குணமடைந்துள்ளனர். கவலைக்கிடமாக 4,682 பேர் உள்ளனர்.
5வது இடத்தில் ஜெர்மனி நாடு உள்ளது. அங்கு கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 157,770ஆக உள்ளது. இதுவரை 5,976 பேர் உயிரிழந்துள்ளனர். 114,500 குணமடைந்துள்ளனர். கவலைக்கிடமாக 2,570 பேர் உள்ளனர்.
6வது இடத்தில் இங்கிலாந்து நாடு உள்ளது. அங்கு கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 152,840ஆக உள்ளது. இதுவரை 20,732 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் யாருமில்லை. கவலைக்கிடமாக 1,559 பேர் உள்ளனர்.
7வது இடத்தில் துருக்கி நாடு உள்ளது. அங்கு கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 110,130ஆக உள்ளது. இதுவரை 2,805 பேர் உயிரிழந்துள்ளனர். 29,140 குணமடைந்துள்ளனர். கவலைக்கிடமாக 1,776 பேர் உள்ளனர்.
8வது இடத்தில் ஈரான் நாடு உள்ளது. அங்கு கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 90,481ஆக உள்ளது. இதுவரை 5,710 பேர் உயிரிழந்துள்ளனர். 69,657 குணமடைந்துள்ளனர். கவலைக்கிடமாக 3,079 பேர் உள்ளனர்.
9வது இடத்தில் ரஷ்யா நாடு உள்ளது. அங்கு கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 93,345ஆக உள்ளது. இதுவரை 841 பேர் உயிரிழந்துள்ளனர். 7,346 குணமடைந்துள்ளனர். கவலைக்கிடமாக 2,300 பேர் உள்ளனர்.
10வது இடத்தில் ரஷ்யா நாடு உள்ளது. அங்கு கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 82,833ஆக உள்ளது. இதுவரை 4,634 பேர் உயிரிழந்துள்ளனர். 77,474 குணமடைந்துள்ளனர். கவலைக்கிடமாக 53 பேர் உள்ளனர்.
அதிகம் பாதிப்படைந்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 15வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் இதுவரை 27,890 பேர் பாதிப்படைந்துள்ளனர். 872 பேர் உயிரிழந்துள்ளனர். அதே சமயம் 6185 பேர் குணமடைந்துள்ளனர். இவ்வாறு உலக மக்கள் மத்தியில் ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸுக்கு எதிரான போர் எப்போது முடிவுக்கு வரும் என்பதே பல மக்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.