இரண்டு ஆண்டுகளுக்குள் கொரோனா அழியும்..!! உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அதிரடி தகவல்..!!

By Ezhilarasan BabuFirst Published Aug 22, 2020, 1:00 PM IST
Highlights

கொரோனா வைரஸுக்கு எதிராக உலக நாடுகள் மிகுந்த பொருளாதார செலவில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருவதன் மூலம்,  வைரஸை எதிர்ப்பதற்கான தடுப்புசி போன்ற ஆதாரங்கள் தற்போது நம்மிடம் உள்ளன. 

இரண்டு ஆண்டுகளுக்குள் கொரோனா வைரஸ்  முடிவுக்கு வரும் என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார். 1918 ஆம் ஆண்டு ஏற்பட்ட தொற்று நோயைக் காட்டிலும், இந்த வைரஸ் சீக்கிரத்தில் அழியும் என அவர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது, உலக அளவில் 2.31கோடி பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 8.3 லட்சம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 1.57 கோடிக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 66 லட்சம் பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலக அளவில் 61, 838 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த உலகளவில் எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்தும் அது கட்டுக்குள் வரவில்லை. எனவே பிரத்தியேக தடுப்பூசியால் மட்டுமே இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியும் என ஒட்டுமொத்த உலக நாடுகளும் தடுப்பூசி எதிர்நோக்கி காத்திருக்கின்றன. இந்நிலையில் அதற்கான ஆராய்ச்சியில் உலகளவில் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் ரஷ்யா தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது, சீனாவும் தங்கள் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசிக்கு விலை நிர்ணயித்துள்ளது. அதற்கு அடுத்த நிலையில் இந்தியாவும் தடுப்பூசி குறித்து அறிவிப்பு வெளியிட தயாராகி வருகிறது. 

இந்நிலையில்  ஜெனிவாவில் உள்ள உலக சுகாதார  அமைப்பின் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த  அந்த அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம், எல்லா நாடுகளிலும் அந்நாடுகளின் நேரத்தைவிட வேகமாக பரவுவதன் காரணமாக கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. அதிலும் பன்மடங்கு வேகமாக பரவியுள்ளது. அந்த காலத்தை  ஒப்பிடுகையில் உலகம் தொழில்நுட்ப ரீதியாக முன்னேறி உள்ளது. அது இந்த வைரஸை எதிர்ப்பதில் மிகுந்த பயனுள்ளதாக அமைந்துள்ளது. கொரோனா வைரஸுக்கு எதிராக உலக நாடுகள் மிகுந்த பொருளாதார செலவில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருவதன் மூலம்,  வைரஸை எதிர்ப்பதற்கான தடுப்புசி போன்ற ஆதாரங்கள் தற்போது நம்மிடம் உள்ளன. இந்த நம்பிக்கையின் அடிப்படையில் கடந்த 1918ம் ஆண்டு ஏற்பட்ட காய்ச்சலை காட்டிலும், வெகு சீக்கிரத்தில் இந்த கொரோனா வைரஸை நாம் அழிக்க முடியும் என்று கருதுகிறேன். என அவர் தெரிவித்துள்ளார்.  

 

click me!