அடங்காப்பிடாரி கொரோனா அடங்கியது சீனாவில்...!! 65 ஆயிரத்து 541 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்..!!

By Ezhilarasan Babu  |  First Published Mar 14, 2020, 2:57 PM IST

இந்நிலையில் சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள  அறிக்கையில் ,  சீனாவில் இதுவரை 80 ஆயிரத்து  824 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது  உறுதி செய்யப்பட்டுள்ளது .  இதில் 3 ஆயிரத்து 189 பேர் உயிரிழந்துள்ளனர் . 


சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது.    இதுவரை சுமார் 65 ஆயிரத்து 541 நோயாளிகள் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர் என  சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தகவலை வெளியிட்டுள்ளது .   சீனாவில் தோன்றிய கொரோன வைரஸ் சீனாவில் மிகப்பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ளது . அதுமட்டுமல்லாது சீனாவைத் தாண்டி சுமார் நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது . உலகளவில் இதுவரை ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும்   அதிகமானோருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .

 

Latest Videos

 சீனாவில் ஆரம்பத்தில் தினமும் கொத்துக்கொத்தாக மக்கள் பலியான நிலையில் தற்போது அங்கு  வைரஸ் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது . அங்கு கொரோனாவின்  வீரியம் வெகுவாகக் குறைந்துள்ளதால் புதிய நோயாளிகளின் வருகை மற்றும் இறப்பு விகிதமும் கணிசமாக குறைந்துள்ளது .  பெரும்பாலான நோயாளிகள் விரைவில் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர் .  சீனாவில் நேற்று 13 பேர் கொரோனாவுக்கு  பலியாகியுள்ளனர் இதன் மூலம் பலியானோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து  189 ஆக உயர்ந்துள்ளது . 

இந்நிலையில் சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள  அறிக்கையில் ,  சீனாவில் இதுவரை 80 ஆயிரத்து  824 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது  உறுதி செய்யப்பட்டுள்ளது .  இதில் 3 ஆயிரத்து 189 பேர் உயிரிழந்துள்ளனர் .  12 ஆயிரத்து 94 பேர்  தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் .  65 ஆயிரத்து 541 பேர் குணமடைந்துள்ளனர் .  இந்நிலையில் நேற்று மட்டும் 1, 430 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் .  நேற்று புதிதாக 11 பேருக்கு கொரோனா அறிகுறியிருப்பது கண்டறியப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் .  அவர்களில் 7 பேர் வெளிநாடுகளுக்குச் சென்று வந்த பிறகு பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது .
 

click me!