கொரோனா தாக்கியவர்களை இந்தியாவுக்கு அனுப்பி..? படுபாதகமான காரியத்தை அரங்கற்றும் பாகிஸ்தான்..!

By Thiraviaraj RM  |  First Published Apr 8, 2020, 4:26 PM IST

பாகிஸ்தான் பாகிஸ்தானுக்கு சொந்தமா? அல்லது பாகிஸ்தான், சீனாவுக்கு சொந்தமா? என்கிற சந்தேகமே உருவாகியுள்ளது. 


கடந்த ஐந்தாம் தேதி இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். பலவிதமான பதட்டமான சூழலில் தான் இப்போதும் ஜம்மு -காஷ்மீர் இருக்கிறது. பாகிஸ்தானிலிருந்து கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவ வைக்கிறார்கள். அப்படி அனுப்பி வைக்கப்படும்  தீவிரவாதிகள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் வந்திருக்கிற வாய்ப்புகள் இருக்கிறது.

Latest Videos

அதற்கு காரணம் பாகிஸ்தான் எல்லையில் உள்ள அந்நாட்டை சேர்ந்த 600 ராணுவ எல்லை பாதுகாப்பு வீரர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்படியானால் பாகிஸ்தான் பொருளாதாரம் எப்படி இருக்கும். நாம் ஒரு டாலருக்கு 76 ரூபாய் கொடுக்கிறோம். பாகிஸ்தான் ஒரு டாலருக்கு 105 ரூபாய் கொடுக்கிறது. பாகிஸ்தானின் அன்னிய செலவாணி கையிருப்பு ஆறு பில்லியனில் இருந்து எட்டு பில்லியன் வரை தான் இருக்கும்.

இப்போது பாகிஸ்தான் கொரோனா தாக்குதலால் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்து கொண்டிருக்கிறது. மத்தியரசின் வங்கியிலிருந்து பாகிஸ்தான் அரசாங்கத்திற்கே 13 சதவிகித வட்டியில் தான் நிதியை கொடுத்து வருகிறார்கள். அதில் ஒரு சதவிகித வட்டியை கூட்டி மக்களுக்கு கொடுத்தாலும் அது மிகப்பெரிய சுமையாகவே இருக்கும். ஆகையால் அவர்களது பெரிய வியாபாரம் எல்லாம் துண்டித்துப்போய் கிடக்கிறது. உலக வங்கி பாகிஸ்தானை நம்பி கடன் கொடுக்கலாமா? வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டிருக்கும் நிலையில் தான் இம்ரான்கான் மிகப்பெரிய ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறார்.’’ ஐ.எம்.எஃப் எங்களுக்கு கடன் கொடுக்காவிட்டால் மிகப் பெரிய சோதனையை சந்திக்க வேண்டி இருக்கும்’’ எனக் கூறியிருக்கிறார்.

இதே போலத் தான் பாகிஸ்தான் சீனாவிடம் கெஞ்சியது. சீனாவும் பாகிஸ்தானுக்கு மாஸ் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கியது பாதி மாஸ்க்குகளை உதவியாகவும் மாஸ்க்குகளை கட்னுக்கும் சீனாவிடம் பாகிஸ்தான் பெற்றது. ஆனால், மாஸ்க்குகள் உள்ளாடையான ஜட்டிகளிலிருந்து தயாரிக்கப்பட்டதாக செய்தி வெளியாகின. ’சீனா நம்மை ஏமாற்றி விட்டது. இந்த மாஸ்க்குகள் நல்ல துணியிலிருந்து தயாரிக்கப்படவில்லை. உள்ளாடை தயாரிக்கும் துணியிலிருந்து தயாரிக்கப்பட்டது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 இதே சீனா, பாகிஸ்தானுக்கு கப்பல் படைக்கு தேவையான கப்பல்களை உருவாக்கி கொண்டிருக்கிறது. சீனாதான் பாகிஸ்தானை மிகப்பெரிய அளவில் கவர்ந்து வைத்து இருக்கிறது. இந்நிலையில் பாகிஸ்தான் பாகிஸ்தானுக்கு சொந்தமா? அல்லது பாகிஸ்தான், சீனாவுக்கு சொந்தமா? என்கிற சந்தேகமே உருவாகியுள்ளது. சில நாட்களுக்கு பிறகு பாகிஸ்தானின் பொருளாதாரம் பரிதாப நிலைக்கு சென்றுவிடும். பாகிஸ்தானை மொத்தமாக சீனா கையகப்படுத்தி விடும். இது இந்தியாவிற்கு தலைவலியாக இருக்கும். அந்தத் திட்டங்களை தான் சீனா இப்போது பெரிய அளவில் நிகழ்த்தி கொண்டிருக்கிறது.

click me!