இந்தியாவுக்கு எதிராக விஷத்தை கக்கிய சீனா...!! ஐநாவில் ரவுண்டு கட்டி அடித்த சர்வதேச நாடுகள்... கெத்துகாட்டிய இந்தியா..!!

By Ezhilarasan BabuFirst Published Jan 16, 2020, 12:31 PM IST
Highlights

மற்ற உறுப்பு நாடுகளும் இதை பொருட்படுத்தவே இல்லை அத்துடன் இது ஒரு முறை சாரா ஆலோசனை என்று கூறி இதை புறக்கணித்துவிட்டனர்.  

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் காஷ்மீர் பிரச்சனையை எழுப்ப முயன்ற சீனாவின் முயற்சி ஐநா உறுப்பு நாடுகளால் முறியடிக்கப்பட்டுள்ளது .  ஐநா உறுப்பினர்கள் யாரும் சீனாவின் வாதத்தை பொருட்படுத்த விரும்பாததால் அதன் முயற்சி தோல்வி அடைந்துள்ளது .  காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு காஷ்மீர் முழுவதுமாக இந்தியாவுடன் இணைக்கப் பட்டதுடன் லடாக் ,  காஷ்மீர் என இரண்டு மாகாணங்களாக பிரித்து இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது . இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் ,  சீனாவின் ஆதரவுடன் அது ஐக்கிய நாடுகள் சபை வரை கொண்டு சென்று இதை சர்வதேச பிரச்சினையாக முயற்சித்து வருகின்றன .  சீனாவின் உதவியுடன் ஐக்கிய நாடுகள் சபை வரை கொண்டு செல்லப்பட்டுள்ளது.  ஆனால்  காஷ்மீர் விவகாரம் ,  இந்தியா பாகிஸ்தானுக்கு இடையேயான பிரச்சனை எனவே இரு நாடுகளும் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என கூறி ஐநா மன்றம்  இதிலிருந்து விலகிக்கொண்டது . 

ஆனாலும் சீனாவும் பாகிஸ்தானும் இதை விடுவதாக இல்லை,  எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் இந்தியாவுக்கு எதிராக காஷ்மீர் விவகாரத்தை சீனா ஐநா மன்றத்தில் எழுப்பி வருகிறது .  கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட காஷ்மீர் விவகாரத்தை எழுப்பு முயற்சித்து  அதில் சீனா தோல்வியடைந்தது .  இந்நிலையில் மீண்டும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் ரகசிய கூட்டத்தில் ஐநாவுக்கான சீனாவின் தூதர் ஜாங் ஜூன் காஷ்மீர் தொடர்பாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்து இருப்பதாக கூறி சர்வதேச நாடுகளின் கவனத்தை பெற முயன்றார் , அப்போது பாகிஸ்தானின் கூட்டாளியான சீனாவைத் தவிர யூ என் எஸ் சி உறுப்பினரும் இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை ,  மற்ற உறுப்பு நாடுகளும் இதை பொருட்படுத்தவே இல்லை அத்துடன் இது ஒரு முறை சாரா ஆலோசனை என்று கூறி இதை புறக்கணித்துவிட்டனர்.  

எனவே  ஐக்கிய நாடுகள் சபையில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பி இரண்டாவது முறையாக சீனா இதில் தோல்வி அடைந்துள்ளது .  இது குறித்து தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையத் அக்பருதீன் , பாகிஸ்தானின் தவறான கூற்றுகள்  ஐநாவில் அம்பலப் படுத்தப்பட்டன இந்தியாவின் நண்பர்கள் இந்தியாவை ஆதரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது .  இது இரண்டு நாடுக்கு இடையான பிரச்சனை என அவர்கள் தெளிவாக கூறியுள்ளனர் . இதன்மூலம் பாகிஸ்தானும் சீனாவுக்கும்  நல்ல பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது .  பாகிஸ்தான் பிரதிநிதிகளால் கூறப்படும் ஆபத்தான சூழ்நிலையோ அல்லது பாகிஸ்தானின் பல்வேறு பிரதிநிதிகளால் பலமுறை கூறப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் நம்ப தகுந்தவையாக இல்லை என்று ஐநா உறுப்பி நாடுகள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியாவின் நண்பர்கள் இவ்வாறு  கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது என அப்போது அவர் தெரிவித்தார். 

click me!