சீன ஆராய்ச்சியாளர் அமெரிக்காவில் சுட்டுக் கொலை..!! கொரோனா வைரஸ் பற்றி ஆய்வு செய்து வந்த நிலையில் அதிர்ச்சி..!!

By Ezhilarasan Babu  |  First Published May 7, 2020, 6:47 PM IST

பின்னர் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள புகழ்பெற்ற கார்னெகி மெலன் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பை மேற்கொண்டார் .  லியூ கொரோனாவுக்கான செல்லுலார் வழிமுறைகளை நன்கு புரிந்துகொள்ள அவர் ஆய்வு மேற்கொண்டு வந்தார் என தெரிவிக்கப்படுகிறது , 


சீனாவைச் சேர்ந்த கொரோனா வைரஸ் ஆராய்ச்சியாளர் அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது ,  ஏற்கனவே அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கொரோனா வைரஸ் விவகாரத்தில் பனிப்போர் நீட்டித்து வரும் நிலையில் தற்போது சீனாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர் அமெரிக்காவில் படுகொலை செய்யப்பட்டுள்ளது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது .   பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சி உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் டாக்டர் பிங் லியூ ( 37 ) வயதான இவர் கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் . இந்நிலையில் அவர் வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்டார் என  பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகமும் அந்நாட்டு காவல் துறையும் தகவல் தெரிவித்துள்ளது. 

Latest Videos

டாக்டர் பிங் லியூ சனிக்கிழமை பிற்பகல் ரோஸ் டவுன்ஸப்பில் உள்ள அவரது  வீட்டில் தலை கழுத்து உள்ளிட்ட உடற்பகுதிகளில்  துப்பாக்கி குண்டு காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார் ,  அவர் சடலமாக கிடந்தபோது  அவரது மனைவியும் வீட்டில் இல்லை தம்பதியருக்கு இதுவரை குழந்தைகளும் இல்லை என பீட்டர்ஸ் பர்க் போஸ்ட் கெஜட் செய்தி வெளியிட்டுள்ளது .  சீனாவை பூர்வீகமாக கொண்ட லீவ் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் இளங்கலை மற்றும் பிஎச்டி பெற்றாவர் ஆவார்,  பின்னர் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள புகழ்பெற்ற கார்னெகி மெலன் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பை மேற்கொண்டார் .  லியூ கொரோனாவுக்கான செல்லுலார் வழிமுறைகளை நன்கு புரிந்துகொள்ள அவர் ஆய்வு மேற்கொண்டு வந்தார் என தெரிவிக்கப்படுகிறது ,

  

லியூ மரணம் குறித்து ரோஸ் காவல்துறை கூறுகையில் லீயூவை  வீட்டில் சுட்டுக்கொன்றதாக சந்தேகிக்கப்படும் ஒரு நபர் அவரது காரில் இறந்து கிடந்துள்ளார் ,  லீயூவை கொன்ற அந்த நபர் தனது காருக்கு திரும்பிவந்து துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்கின்றனர் . அதாவது லீயூ கொல்லப்பட்ட அதே நேரத்தில் 46 வயதான ஹாவோகு என்ற யுபிஎஸ்சி ஆராய்ச்சியாளர் பென்சில்வேனியாவில் ரோஸ் டவுன்ஷிப்பில் உள்ள லியூ வின் வீட்டில் இருந்து 100 மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த தனது காருக்குள் சுடப்பட்டு இறந்து கிடந்தார் , ஆராய்ச்சியாளர் ஹாவோகும் டாக்டர் பிங் லியூவுக் நண்பர்கள், அப்படி இருக்கையில் அவர்கள் இருவரும் எப்படி ஒருவர் மாற்றி ஒருவர் சுட்டுக்கொண்டு இறந்திருப்பார்கள் எனவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். 

 

click me!