அமெரிக்காவின் 24 பொய்கள் என்ற தலைப்பில் சீனா மறுப்பு கட்டுரை..! லிங்கனை மேற்கோள்காட்டி ட்ரம்புக்கு பதிலடி..!!

By Ezhilarasan Babu  |  First Published May 11, 2020, 8:04 PM IST

அமெரிக்காவுக்கு இந்த கட்டுரையில் எதிர்வினை ஆற்றியுள்ளது சீனா. இயற்கையாக உருவான ஒரு வைரஸை  சீனாவுடன் பொருத்த அமெரிக்கா முயற்சி செய்வதாக சீனா அந்த கட்டுரையில் அமெரிக்காவை கடுமையாக சாடியுள்ளது ,


கொரோனா வைரஸ் தொடர்பாக அமெரிக்கா தொடர்ந்து சீனா மீது குற்றம் சாட்டி வரும் நிலையில் தற்போது சீனா அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்துள்ளது .  இந்நிலையில் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் சீனா மீது அமெரிக்கா வைத்த மோசமான 24 குற்றச்சாட்டுகள் மற்றும் பொய்கள் என்ற தலைப்பில் சுமார் 11,000  சொற்களின் ஒரு மறுதலிப்பு கடிதத்தை சீனா எழுதி இருக்கிறது .  அதில் அமெரிக்கா சொன்ன அனைத்து பொய்களும் அமெரிக்க  அரசியல்வாதிகளாலும் ஊடகங்களாலும் புனையப்பட்டது என்றும், அமெரிக்காவின்  குற்றச்சாட்டு ஒன்றுக்கும் தங்களிடம் போதிய பதில் இல்லை என சீனா தெரிவித்துள்ளது .  இந்தக்  கட்டுரையை ஞாயிற்றுக்கிழமை  சீனா அரசாங்கத்தால் இயக்கப்படும் செய்தி நிறுவனமான சின்ஹுவாவும்  அதன் அதிகாரப்பூர்வ கணக்கில் இருந்தும் பகிரப்பட்டுள்ளது .  வைரஸை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த சீனா தவறியதாகவும் அது குறித்து  ஒரு சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் எழுந்த கோரிக்கை அடுத்து சீனா இந்த மறுதலிப்பு கட்டுரையை வெளியிட்டுள்ளது .

Latest Videos

குறிப்பாக கடந்த சில வாரங்களாக சீனாவின் மீதான குற்றச்சாட்டை அமெரிக்கா அதிகப்படுத்தியுள்ளது ,  ஆரம்ப கட்டத்தில் இந்த வைரஸ் பரவியபோது சீனா அதை உலகிற்கு அறிவிக்க மறுத்து விட்டது  என்றும் ,  சீனாவின் ஆய்வுக்கூடத்தில் இருந்துதான் வைரஸ் கசிந்தது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்,  மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பும் கூறிவருகின்றனர் ,  ஆனால் இந்த வைரஸ் டிசம்பரில் தோன்றியபோதே இது குறித்து முறையாக அறிவிக்கப்பட்டது என சீனா பதிலளித்துள்ளது .  அமெரிக்காவில் வைரஸை கட்டுப்படுத்திய தவறியதால் அதை திசை திருப்ப சீனாவின் மீது தொடர்ந்து ட்ரம்ப்  குற்றஞ்சாட்டி வருவதாக சீனா தெரிவித்துள்ளது .  சீனா வெளியிட்டுள்ள இந்த கட்டுரையில் அமெரிக்காவின் 16-வது ஜனாதிபதியான ஆபிரகாம் லிங்கனை அது மேற்கோள் காட்டியுள்ளது .  அதாவது லிங்கன் சொன்னது போல்  " நீங்கள் சிலரை எப்போதுமே முட்டாள்கள் ஆக்கலாம்,  மற்றும் எல்லா மக்களையும் சில நேரம் முட்டாள்கள் ஆகலாம் ,ஆனால் நீங்கள் எல்லா மக்களையும் எல்லா நேரத்திலும் முட்டாளாக்க முடியாது " என்பதை சீனா அமெரிக்காவுக்கு சுட்டிக்காட்டியுள்ளது.  

இதுமட்டுமின்றி பல்வேறு ஊடக அறிக்கைகள் ,  விஞ்ஞான ஆய்வுகள்  மற்றும் உலக சுகாதார அமைப்பின் அறிக்கைகள் போன்றவற்றை மேற்கோள்காட்டி  அமெரிக்காவுக்கு இந்த கட்டுரையில் எதிர்வினை ஆற்றியுள்ளது சீனா. இயற்கையாக உருவான ஒரு வைரஸை  சீனாவுடன் பொருத்த அமெரிக்கா முயற்சி செய்வதாக சீனா அந்த கட்டுரையில் அமெரிக்காவை கடுமையாக சாடியுள்ளது ,  முதன் முதலில் வைரஸ் வுஹானில் தென்பட்டதால் உடனே வுஹானில்தான் அது உருவானது என எடுத்துக்கொள்ள முடியாது ,  உண்மையிலேயே அது எங்கிருந்து உருவானது என்பது கண்டுபிடிக்கப்படவில்லை என அதில் சீனா பதில் அளித்துள்ளது.  அதேபோல் வுஹான் இன்ஸ்டியூட் ஆஃப் வைராலஜி ஆய்வகத்தில் இந்த வைரஸ் உருவாக்கப்பட்டதும் அல்ல அது அங்கிருந்து கசிந்ததும் அல்ல, என சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளதுடன்,  சீனா இந்த வைரஸ் விவகாரத்தில்   மிகவும் வெளிப்படையாக... வெளிப்படையாக... மிகவும் வெளிப்படையாக பொறுப்பான முறையில் உலகிற்கு சரியான நேரத்தில்  தகவலை கொண்டு சேர்த்திருக்கிறது , எனவும் உறுதிபட தெரிவித்துள்ளது . 

ஆனால் கடந்த ஜனவரி 27 அன்று சிசிடிவிக்கு அளித்த ஒரு பேட்டியின்போது  கொரோனா வைரஸ் குறித்த தகவல்களை சரியான நேரத்தில் தனது அரசாங்கம் வெளியிடவில்லை என்று வுஹான் நகர ஆளுனர் ஒப்புக் கொண்டதை ஏனோ சீனா இந்த கட்டுரையில்  மேற்கோள் காட்ட தவறிவிட்டது.  மொத்த த்தில் அந்த கட்டுரையில்  அமெரிக்கா தொடர்ந்து சீனாவின் மீது வைத்து வரும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு  சீனா மிகக் காட்டமாகவும் ஆதாரப்பூர்வமாகவும் பதில் அளித்துள்ளது .  அதேபோல் வைரஸ் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பி வருகிறது என்ற அமெரிக்காவின் விமர்சனத்தையும் இந்த கட்டுரையில் சீனா  புறந்தள்ளியுள்ளதுடன், அமெரிக்க அரசியல்வாதிகள் , அமெரிக்கா சார்புடைய அறிஞர்கள் மற்றும் ஊடகங்கள் தொடர்ந்து உண்மைக்கு மாறான பிரச்சாரத்தின் மூலம்  சீனாவுக்கு விரோதமாக செயல்படுவதுடன்  சீனாவை பலியாக்க  முயற்சிக்கின்றனர் என அந்த கட்டுரை விமர்சித்துள்ளது .
 

click me!