சீனாவில் தொடர்ந்து 2வது ஆண்டாக மக்கள் தொகை சரிவு! காரணம் இதுதான்..!!

By Kalai Selvi  |  First Published Jan 17, 2024, 7:55 PM IST

ஒருகாலத்தில் சீனாவின் மக்கள் தொகையை இந்தியாவை முந்தியது. ஆனால் இந்த ஆண்டு கணிசமாகக் குறைந்துள்ளது.


ஒரு காலத்தில் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட சீனாவின் மக்கள்தொகை, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக குறைந்துள்ளது. ஒரு அறிக்கைகளின்படி, சீனாவில் 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் மக்கள் தொகை இன்னும் அதிகமாக குறைந்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் இறுதியில், சீனாவில் மக்கள் தொகை 1409 மில்லியனாக இருந்தது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக கடந்த ஆண்டு சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா சாதனை படைத்தது. 

சீனாவின் மக்கள்தொகை குறைந்து வருவது நீண்ட கால பொருளாதார வளர்ச்சி பற்றிய கவலைகளை எழுப்புகிறது. எனவே, பெய்ஜிங்கில், இப்போது மானியங்கள் மற்றும் கருவுறுதல் சார்பு பிரச்சாரங்கள் மூலம் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க துடிக்கிறது.

Tap to resize

Latest Videos

காரணம் என்ன?
ஒரு குழந்தை கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, சீனாவின் பிறப்பு விகிதம் கடுமையாக சரிந்தது. 2015ல் இந்த விதி தளர்த்தப்பட்டு 2 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டாலும் பிறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை. கோவிட் தொற்றுநோயும் இதற்கு பங்களித்தது. அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவும், அதிகப் பெண்கள் பணியிடத்தில் நுழைவதும் மக்கள்தொகைக் குறைவுக்குப் பங்களித்தது.

இதையும் படிங்க: 300 நாள் ஹோட்டலில் வாழ்ந்த குடும்பம்.. ஒரு நாள் வாடகை 11 ஆயிரம்.. எங்கு தெரியுமா.?

சீனாவில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், தொழிலாளர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. நுகர்வோரும் குறைந்துள்ளனர். முதியோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முதியோர் பராமரிப்பு மற்றும் ஓய்வூதிய பலன்களுடன் தொடர்புடைய செலவுகள் அதிகரித்து வருகின்றன. இந்த அனைத்து காரணிகளாலும் நாட்டின் வளர்ச்சி வாய்ப்புகள் குறைந்து வருகின்றன.

இதையும் படிங்க:  புதிய வகை கொரோனா மாறுபாட்டை உருவாக்கும் சீன விஞ்ஞானிகள்.. 100% உயிரை கொல்லுமாம்.. பகீர் தகவல்..

2050 ல் இன்னும் சரியும்:
2050 ல் சீனாவின் மக்கள்தொகையில் குறிப்பிடத்தக்க சரிவை ஐக்கிய நாடுகள் நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். ஏனெனில், 2035ஆம் ஆண்டுக்குள் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சீனாவின் ஓய்வூதிய வயது மக்கள் தொகை 40 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!