இவ்வகை சந்தைகள் உலகிற்கு மிக மோசமான கொடிய நோய்களை உண்டாக்கும் கிருமிகளை உற்பத்தி செய்யும் கூடங்களாக மாறும் அபாயம் உள்ளது என எச்சரித்திருந்தனர்.
கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்திருப்பதாக சீனா கூறிவரும் நிலையில் , மீண்டும் பழையபடியே , கொரூரமான காட்டு விலங்குகளை விற்பனை செய்யும் இறைச்சிக் கூடங்கள் சீனாவில் செயல்பட தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன . கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருந்த வுகான் நகரம் கடந்த இரண்டு மாதங்களாக சீல் வைக்கப்பட்டிருந்ததது . முன்னதாக இங்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஆபத்தான பாங்கோலின் மற்றும் எறும்பு தின்னிகள் , நாய் , குரங்கு உள்ளிட்ட காட்டு விளங்குகளில் இறைச்சிகளில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவியது என சந்தேகிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் வுகானில் செயல்பட்டு வந்த ஹுவானன் என்ற கடல் உணவு மொத்த சந்தையும் வைரசுக்கு காரணமாக இருக்கலாம் என மூடப்பட்டிருந்தது, அதேபோல் சீனாவில் காட்டு விலங்குகளின் இறைச்சிக் கூடங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டிருந்தது .
இந்நிலையில் இந்த வைரஸ் பரவி சீனாவில் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். சுமார் 3 ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் இந்நிலையில் இந்த வைரஸ் அமெரிக்கா ஈரான் இத்தாலி உள்ளிட்ட என்னற்ற நாடுகளுக்கு பரவி பாதிப்பை ஏற்படுத்திவருகிறது , இந்த வைரசுக்கு இதுவரை உலகளவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்து தாண்டியுள்ளது. இந்நிலையில் கிருமி பரவிய சீனாவில் வுகான் நகரத்தில் நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் ஆகவே சீனா இயல்பு நிலைக்கு திரும்புகிறது என்றும் அந்நாடு அறிவித்துள்ளது . இந்நிலையில் அங்கு கொரோனா வைரஸ் பரவ காரணமாக இருந்ததாக கருதப்படும் காட்டு விலங்கு இறைச்சி கூடங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அங்கு கவர்ச்சியான விலங்குகளை கூண்டுக்குள் அடைத்து மக்களை வியாபாரிகள் கவர்ந்து வருகின்றனர். அங்கு மீண்டும் குரங்கு , நாய் , போன்றவற்றின் இறைச்சிகள் விற்பனைக்கு வந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள்களில் செய்தி வெளியாகியுள்ளன.
இந்நிலையில் அச்சந்தைகளில் உள்ள பாதுகாப்பு ஊழியர்கள் செய்தியாளர்களை உள்ளே அனுமதிக்கவும் படம் எடுக்கவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இந்த வைரஸ் பரவுவதற்கு முன்னர் இருந்ததைப் போலவே தெற்கு சீனாவில் டோங்குவானில் உள்ள ஒரு சந்தையில் மீண்டும் பாம்புகள், பல்லிகள் மற்றும் தேரைககள் விற்பனைக்கு வந்துள்ளதாக டெய்லி மெயிலில் ஆதாரத்துடன் செய்தி வெளியாகி உள்ளன . கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன்பு சந்தைகள் செயல்பட்டதை போலவே மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன என்றும் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தென்மேற்கு சீனாவில் குயிலினில் என்ற மற்றொரு சந்தையில் பூனைகள் மற்றும் தெரு நாய்கள் விற்பனைக்கு வந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன . இவ்வகை சந்தைகளால் ஏற்படப் போகும் ஆபத்தை கடந்த 2007 ஆம் ஆண்டே எச்சரித்த விஞ்ஞானிகள், இவ்வகை சந்தைகள் ஆசியா முழுவதும் பல்வேறு இடங்களில் காணப்படுவதாகவும் , இவ்வகை சந்தைகள் உலகிற்கு மிக மோசமான கொடிய நோய்களை உண்டாக்கும் கிருமிகளை உற்பத்தி செய்யும் கூடங்களாக மாறும் அபாயம் உள்ளது என எச்சரித்திருந்தனர். இந்நிலையில் கொடூரமான கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னரும் இச்சந்தைகள் செயல்பட தொடங்கியிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.