கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விஷயத்தில், சீன அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள், பாராட்டும் விதமாக உள்ளது. 'இந்த விஷயத்தில், சீனாவை பார்த்து, மற்ற நாடுகள் கற்றுக் கொள்ள வேண்டும்' என, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது அமெரிக்காவை எரிச்சல் அடைய செய்துள்ளது.
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விஷயத்தில், சீன அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள், பாராட்டும் விதமாக உள்ளது. 'இந்த விஷயத்தில், சீனாவை பார்த்து, மற்ற நாடுகள் கற்றுக் கொள்ள வேண்டும்' என, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது அமெரிக்காவை எரிச்சல் அடைய செய்துள்ளது.
வைரஸ் பாதிப்பு குறித்த தகவலை, மற்ற நாடுகளுக்கு, சீனா முன் கூட்டியே தெரிவித்திருந்தால், பெரிய பாதிப்பு ஏற்படாமல் தவிர்த்திருக்கலாம். 'சீனாவின் வூஹான் நகரில் உள்ள ஆய்வகத்தில் இருந்து தான், கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி, சீனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். ஆனால், உலக சுகாதார நிறுவனம், டிரம்பின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது. கடும் அதிருப்தி அடைந்த டிரம்ப், 'உலக சுகாதார நிறுவனம், சீனாவின் செய்தித் தொடர்புத் துறை போல் செயல்படுகிறது என கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். மேலும், உலக சுகாதார அமைப்பிற்கு தரும் நிதி உதவியையும் அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இந்நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின், அவசர கால தொழில்நுட்ப துறை இயக்குனரான மரியா வான் கெர்கோவ் கூறிகையில்;- சீனாவில், முதன் முதலாக கொரோனா வைரஸ் பரவிய வூஹான் நகரில், தற்போது புதிதாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அங்கு, கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக, சீன அரசு மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டத்தக்கவை. இதற்காக சீன அரசுக்கு வாழ்த்துகளை தெரிவிக்கிறோம்.
கொரோனாவை கட்டுப்படுத்தும் விஷயத்தில், சீனாவிடமிருந்து, மற்ற நாடுகள் பாடம் கற்க வேண்டும். வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்ட நகரில், தற்போது, முழுமையாக இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதற்காக சீன அரசு, எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டது என்பதை, மற்ற நாடுகள் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்காக, வூஹான் நகர மக்களும் ஓய்வின்றி உழைத்தனர். அரசின் நடவடிக்கைளுக்கு, முழு ஒத்துழைப்பு அளித்தனர். கொரோனா பரவலை தடுப்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பற்றிய தகவல்களை, மற்ற நாடுகளுடன் சீனா பகிர்ந்து கொள்ள வேண்டும் என கூறியிருந்தார்.
ஏற்கனவே கொரோனா விஷயத்தில் சீனா மீதும் உலக சுகாதார நிறுவனம் மீதும் டிரம்ப் கடும் ஆத்திரத்தில் இருந்து வரும் நிலையில் இது மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.