உலகமெல்லாம் ஏமாற்றி இறுதியில் இந்தியாவிடம் சிக்கிய சீனா..!! திருட்டுத்தனத்தை மறைக்க திமிர் பேச்சு..!!

By Ezhilarasan BabuFirst Published Apr 28, 2020, 2:26 PM IST
Highlights

ஆனால் இதை விட்டுவிட்டு சீன தயாரிப்புகள்  தரமற்றது என்று முத்திரை குத்துவது  மற்றும் முன்கூட்டியே பொருட்கள் குறித்து தவறான முடிவுக்கு வருவது நியாயமற்றது பொறுப்பற்றது

சீனாவிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட பரிசோதனை கருவிகளை பயன்படுத்துவதை நிறுத்துமாறு மாநிலங்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தி இருப்பதற்கு சீனா மிகுந்த கவலை தெரிவித்துள்ளது.  உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது .  கிட்டத்தட்ட இந்தியாவில் 29 ஆயிரத்து 451 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது . உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 939 ஆக அதிகரித்துள்ளது .  இந்நிலையில் நாடு முழுவதும் பரிசோதனையை தீவிரப்படுத்த சீனாவிடமிருந்த 6.5 லட்சம் அதிவிரைவு பரிசோதனை கருவிகளை இந்தியா இறக்குமதி செய்தது ,  இந்நிலையில் அந்த கருவிகளில் முடிவு துல்லியமானதாக இல்லை என்றும் இது  தவறான முடிவுகளை அறிவிப்பதாக எழுந்த புகாரை அடுத்து அந்த கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என இந்திய மருத்துவ கவுன்சில் மாநில அரசுகளுக்க அறிவித்தது

  

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ளார் சீன தூதரக செய்தித்தொடர்பாளர்  " ஜி ரோங்"  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் .  அதில் ,  சீனாவிடம் இருந்து பெற்ற  அதிவிரைவு பரிசோதனை கருவிகளை பயன்படுத்தவேண்டாமென இந்திய மருத்துவ கவுன்சில் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி இருப்பது கவலை அளிக்கிறது .   இந்த டெஸ்ட் போட்டிகளை வழங்கிய இரண்டு தனியார் நிறுவனங்களான குவாங்சோ வோண்ட்ஃபோ பயோடெக் மற்றும் ஜுஹாய் லிவ்சன் கண்டறிதலின் கருவிகளை கள நிலைமைகளில் மதிப்பீடு செய்த பின்னரை அவைகள் நல்ல செயல்திறன் மிக்கது என வாக்குறுதி அளித்தது ஆனாலும்  அவற்றின் உணர்திறனில் மாற்றம் ஏற்பட்டுள்ளது தற்போது தெரிகிறது என்றார் .குறிப்பிட்ட அந்த இரண்டு சீன நிறுவனங்களும் ஏற்கனவே தங்கள் பரிசோதனை கருவிகளை சீனாவின் தேசிய மருத்துவ தயாரிப்புகள் நிர்வாகத்திடம் காட்டி சான்றிதழை பெற்றுள்ளன .  மேலும் அவை (ஐ சி எம் ஆர்) இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் மூலமும் சரிபார்க்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளன . 

மற்றும் தேசிய வைராலஜி நிறுவனம் (ஐ என் வி) புனே அவைகள் சிறப்பாக தயாரிக்கப்பட்டு இருப்பதாக கூறியது ,  அதேபோல் அந்த குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களும் தங்கள் கருவிகளை ஐரோப்பா ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளனர் என ரோங் மேற்கோள் காட்டியுள்ளார்.  தற்போது இந்த  டெஸ்ட் கிட்டுகளின் தேவை  உலக அளாவில் அதிகரித்துள்ளது அதை கொண்டுசென்று இறக்குமதி செய்வதில் போக்குவரத்து நெருக்கடிகள் உள்ளன,  இந்நிலையில் அந்த கருவிகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அதில் கொடுக்கப்பட்டுள்ள  விவரக்குறிப்புகளுக்கு ஏற்ப அதை குறிப்பிட்ட  நபர்கள் பயன்படுத்த வேண்டும் இல்லையென்றால் அதன் துல்லியத்தில் மாறுபாடு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது எனவும் தெரிவித்துள்ள ரோங் ,  ஆனால் இதை விட்டுவிட்டு சீன தயாரிப்புகள்  தரமற்றது என்று முத்திரை குத்துவது  மற்றும் முன்கூட்டியே பொருட்கள் குறித்து தவறான முடிவுக்கு வருவது நியாயமற்றது பொறுப்பற்றது எனவும் அதிருப்தி தெரிவித்துள்ளார். 

இந்தியா,  சீனாவின் நல்லெண்ணத்தையும் நேர்மையும் மதிக்கும் என நம்புகிறேன்,  அதனடிப்படையில் பொருட்களில் குறை இருப்பின் அதை சரியான நேரத்தில் தெரிவிக்கலாம் அதனடிப்படையில்  நியாயமாகவும் சரியாகவும் தீர்க்க முடியும் என நம்புகிறோம் .  வைரஸ் பொதுவான எதிரி என்று நாம் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் மட்டுமே இந்த போராட்டத்தை வெல்ல முடியும் எனவும் கூறியுள்ளார் .  கொரோனா வைரஸை எதிர்த்துப் போரிடவும் இந்தியாவின் முயற்சிகளுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம், இந்தியாவின் கரத்தை மதித்து ஒத்துழைப்பை வலுப்படுத்துவோம் .  ஆரம்ப காலத்திலேயே சிரமங்களை சமாளிக்க இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம் ,  இது நமது மக்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு உலகளவிய மற்றும் பிராந்திய பொது சுகாதார பாதுகாப்பையும் இது மேம்படுத்தும் என  ஜி ரோங் கூறியுள்ளார். ஏற்கனவே பல ஐரோப்பிய நாடுகள் சீனா மருத்துவ பொருட்களின் தரம்  குறித்து குற்றஞ்சாட்டி வந்த நிலையில் தற்போது இந்தியா அந்த குற்றச்சாட்டை தெரிவித்திருப்பது சீனாவை உண்மை முகத்தை உலக அரங்கில் வெளிச்சம் போட்டு காட்டுவதாக அமைந்துள்ளது.   
 

click me!