சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்து! 27 பேர் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி! 20 பேர் படுகாயம்

Published : Sep 19, 2022, 07:08 AM ISTUpdated : Sep 19, 2022, 07:10 AM IST
சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்து!  27 பேர் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி! 20 பேர் படுகாயம்

சுருக்கம்

தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 27 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20 படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சீனாவில் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 27 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20 படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தென்மேற்கு சீனா கிராமப்புற குய்சோ மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையில் 47 பேருடன் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை தாறுமாறாக ஓடி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 27 பேர் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் 20 பேர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

இதையும் படிங்க;- ஆணுறுப்பின் சைஸை அளக்க USB கேபிளை உள்ளே சொருகிய சிறுவன்.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

உடனே விபத்து தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சீனாவில் சாலை விதிகளை முறையாக கடைப்பிடிக்காததால் இந்த போன்ற சாலை விபத்துகள் அதிகம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க;-  அதிர்ச்சி சம்பவம்.!! ஆப்கனில் தொழுகையின் போது குண்டுவெடிப்பு - தலிபான் மதகுரு உட்பட 21 பேர் பலி

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

உலகில் 3 பேருக்கு மட்டுமே உள்ள அரிதிலும் அரிதான புதிய இரத்த வகை கண்டுபிடிப்பு!
டிரம்புடன் போனில் பேசிய பிரதமர் மோடி! வர்த்தக பேச்சுவார்த்தைக்கு மத்தியில் முக்கிய ஆலோசனை!