இந்திய ராணுவ வீரர்கள் சிலரை சிறை பிடித்ததா சீன ராணுவம்..?? எல்லை பதற்றம் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்..!!

By Ezhilarasan Babu  |  First Published May 25, 2020, 11:18 AM IST

இந்திய ஜவான்கள் சிலர் சீனப் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாகவும் அதனால் நிலைமை பதற்றமடைந்ததாகவும், பின்னர் விடுவிக்கப்பட்தாகவும் கூறப்படுகிறது ,


இந்திய- சீன எல்லையான பாங்கொங் த்சோ ஏரி மற்றும் கால்வான் பள்ளத்தாக்கு ஆகியவற்றை சுற்றியுள்ள பகுதிகளில் சீன ராணுவம் தொடர்ந்து தனது படைகளை குவித்து வருவதாகவும் அதனால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.  இந்திய இராணுவத்துடனான மோதலை எந்தவகையிலும் முடிவுக்குக் கொண்டுவர சீனா தயாராக இல்லை என்பதையே அதன் நடவடிக்கைகள் காட்டுவதாக ,   அச்சர்ச்சைக்குரிய பிராந்தியத்தின் நிலைமைகளை நன்கு அறிந்தவர்கள் கூறுகின்றனர்.  சீனா குறிப்பாக கால்வான் பள்ளத்தாக்கில் அதிக அளவில் கூடாரங்களை அமைத்து வருகிறது ,  பதுங்கு குழிகளை ஏற்படுத்தவும் இயந்திரங்கள் கொண்டு வந்துள்ளதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் இந்த நடவடிக்கைகளுக்கு இந்திய தரப்பு கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்த போதிலும் ,  சீனா  போருக்கு தயாராவது போல நடந்து கொள்வதுவதாக கூறப்படுகிறது . இந்நிலையில் இந்திய ராணுவ தலைவர் ,  ஜெனரல் எம்.எம்  நாரவனே லேவில் உள்ள 14 கார்ப்பஸ் தலைமையகத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை  பயணம் மேற்கொண்டதுடன் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றம் ,  அங்குள்ள ராணுவ பாதுகாப்பு உள்ளிட்ட சூழல்கள் குறித்து உயர் அதிகாரிகளுடன் மதிப்பாய்வு செய்துள்ளார் . 

Latest Videos

பாங்கொங் த்சோ ஏரி மற்றும் கால்வான் பள்ளத்தாக்கு ஆகிய இரண்டிலும்  சீனாவுக்கு இணையாக இந்தியாவும் ராணுவத்தை குவித்துள்ளது எனவும் ,  எல்லையில் இந்தியாவுக்கு சாதகமான சூழல் இருப்பதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது கடந்த மே -5ஆம் தேதி மாலை சுமார் 250 சீன மற்றும் இந்திய வீரர்கள் மோதலில் ஈடுபட்டதையடுத்து ,  கிழக்கு லடாக் பகுதியில்  நிலைமை மோசமடைந்தது ,  மறுநாள் வரை நீடித்த பிரச்சனை பிரிகேடியர் அந்தஸ்திலான தளபதிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் பிரச்சனை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது .  ஆனாலும் அங்கு இரு நாட்டின் படைக் குவிப்பு  தொடர்கிறது .  மே-9 அன்று வடக்கு சிக்கிமில் இதே போன்ற சம்பவம் ஒன்று நடைபெற்றது, அதேபோல் கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா எல்லை தாண்டி விட்டதாக கூறி ,  அங்கு  சீனா தனது படைகளை குவித்து வருகிறது .  கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக சீனப் படைகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு எந்தவித அதிகாரப்பூர்வு நடவடிக்கைகளிலும் அது ஈடுபடவில்லை.  இந்த ஒருவார காலத்தில் இருதரப்பிலும் அதிகாரிகள் மட்டத்தில் குறைந்தது 5 கூட்டங்கள் நடந்துள்ளது,  ஆனாலும்  சீனா படைகளை குவிப்பதை நிறுத்தவில்லை.   தொடர்ந்து கால்வான் பள்ளத்தாக்கில் ஏராளமான கூடாரங்களை சீனா அமைத்து வருகிறது, 

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை சீன ராணுவத் துருப்புகள் இந்தியாவின் சாதாரண ரோந்துக்குகூட தடையாக இருப்பதாக கூறியதுடன் ,  எல்லை விவகாரத்தில் எப்போதும் இந்தியா மிகவும்  பொறுப்பான அணுகுமுறைகளை எடுத்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அனுராக்  ஸ்ரீவாஸ்த்தவா தெரிவித்துள்ளார்.   தங்கள் எல்லைக்குள் இந்திய வீரர்கள் அத்து மீறியதாக சீனா கூறிவரும் குற்றச்சாட்டை மறுத்த அவர்,  இது சிக்கிம் மற்றும் லடாக்கில் உள்ள எல்லைக்கோடு பகுதியை ஒருதலைப்பட்சமாக மாற்றுவதற்கான முயற்சி என  சீனாவை குற்றஞ்சாட்டினார் .  இதற்கிடையில் இந்திய சீன படைகளுக்கு இடையே லடாக்கில் பதற்றம் ஏற்பட்டதாக தகவல் வந்ததை அடுத்து இந்திய வீரர்கள் சிலரை  சீனப் படையினர்   சிறைபிடித்ததாவும்  அதிர்ச்சித் தகவல்கள் ஒன்று வெளியாகியுள்ளது, இந்தியா எடுத்த சில நடவடிக்கைகளுக்கு பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது ,  எல்லையிலிருந்து பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்படுள்ள  தகவலில் ,  எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்தில் ஈடுபட்டபோது இந்திய- சீன படைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ,  இந்திய ஜவான்கள் சிலர் சீனப் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாகவும் அதனால் நிலைமை பதற்றமடைந்ததாகவும், பின்னர் விடுவிக்கப்பட்டனர் , அவர்களின் ஆயுதங்கள் திருப்பி ஒப்படைக்கப்பட்டன என அதில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன .  

ஆனால் அது போன்று எந்த சம்பவங்களும் நடைபெறவில்லை இது உண்மைக்கு புறம்பான தகவல் என இந்திய ராணுவம் மறுத்துள்ளது. ஏந்த ராணுவ வீரரும் சிறை பிடிக்கப்படவுமில்லை,  அவர்களின் ஆயுதங்கள் பறிமுதல்செய்யப்படவுமில்லை என இந்திய ராணுவம் மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் "ரைசினா ஹில்ஸுக்கு அனுப்பப்பட்ட சில தகவலின்படி சீனர்கள் இந்திய எல்லைக்குள் எளிதாக வந்து செல்லவதாகவும் , மோட்டார் படகுகளுடன் ஆக்ரோஷமாக ரோந்து பணிகளை செய்து வருவதாகவும் , மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய படைகள் தயார்  நிலையில்  உள்ளதாகவும் கூறப்படுகிறது.  

click me!