சீனாவில் மேலும் ஒரு ஆபத்தான வைரஸ்..!! பன்றிகள் மத்தியில் உருவானதாக தகவல்..!!

By Ezhilarasan Babu  |  First Published May 29, 2020, 6:35 PM IST

இந்தியாவில் மே-மாதத்தில் ஏற்பட்டதாகவும்,  இந்த நோய் இந்திய எல்லை மாநிலமான அசாமில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பன்றிகளை கொன்றதாகவும் அந்த செய்தித்தாள் சுட்டிக்காட்டியுள்ளது.


சீனாவின் வடமேற்கு கன்சு மாகாணத்தில் லான்ஜோ நகருக்கு அருகே,  ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் புதிதாக கண்டுபிடித்திருப்பதாக, சீனாவின் வேளாண் மற்றும் கிராம விவகார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.  இதுவரை பத்தாயிரம்  பன்றிகள் உள்ள ஒரு  பண்ணையில் 90-க்கும் மேற்பட்ட பன்றிகள் இறந்துள்ளதாகவும், இந்த நோய் தொடர்பான மருத்துவ ஆராய்ச்சி நடைபெற்று வருவதாகவும், பன்றிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இந்த காய்ச்சலுக்கு பிரத்தியேக சிகிச்சையோ, தடுப்பூசியோ இல்லை என சீனா தெரிவித்துள்ளது.  அதே நேரத்தில் இதை காரணம் காட்டி,  இந்தியாவிலிருந்து பன்றி இறைச்சி இறக்குமதிக்கு சீனா தடைவிதித்து உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இரு நாட்டுக்கும் இடையே எல்லையில் பதற்றம் நீடித்துவரும் நிலையில், அதன் காரணமாக சீனா இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

சீனாவின் சுங்க பொது நிர்வாகம் மற்றும் வேளாண்மை மற்றும் ஊரக சுகாதார அமைச்சகம் கடந்த புதன்கிழமை வெளியிட்ட கூட்டு அறிக்கையில்,  ஆப்பிரிக்க பன்றி காய்ச்சலை தடுக்கும் முயற்சியில் சீனா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.  இதில் இந்தியாவிலிருந்து பன்றிகள், காட்டுப்பன்றிகள் ஏற்றுமதி தொடர்புடைய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது,  சீனாவின் கால்நடை வளர்ப்பு பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  இது தொடர்பாக எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகவில்லை  என்றாலும்,  சீன கம்யூனிஸ்ட் கட்சியால் நடத்தப்படும் செய்தித்தாளான குளோபல் டைம்ஸ்,  கால்வான் பள்ளத்தாக்கு பிராந்தியத்தில் இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து  இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளது. ஆப்பிரிக்கன் ஸ்வைன் ஃப்ளூ தொடர்பாக முதல் தொற்று  இந்தியாவில் மே-மாதத்தில் ஏற்பட்டதாகவும், இந்த நோய் இந்திய எல்லை மாநிலமான அசாமில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பன்றிகளை கொன்றதாகவும் அந்த செய்தித்தாள் சுட்டிக்காட்டியுள்ளது. 

இந்த நோய் முதலில் சீனாவில் 2018 ஆகஸ்டில் தோன்றியதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.  இந்நிலையில் சீனாவின் வெளியுறவு துறை அமைச்சகம்,  இரு நாட்டுக்கும் இடையே எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்ப்பதில் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறியுள்ளது. எல்லைப் பிரச்சனையில் சீனாவின் நிலைப்பாடு நிலையானது மற்றும் தெளிவானது என்றும் அந்த அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான் கூறியுள்ளார்.  இரு நாட்டுக்கும் இடையே தலைவர்கள் எட்டிய முக்கியமான ஒருமித்த கருத்துக்களை நாங்கள் கவனமுடன் செயல்படுத்தி வருகிறோம். இருநாடுகளும் கையெழுத்திட்ட  பொருத்தமான ஒப்பந்தங்களை கண்டிப்பாக கடைப்பிடித்து வருகிறோம். மேலும் சீனாவின் பிராந்திய இறையாண்மையையும், பாதுகாப்பையும், பாதுகாப்பதில் உறுதியாக உள்ளோம். அத்துடன் இந்தியா-சீனா இடையே ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனை கட்டுப்படுத்தப்பட கூடியது. இருநாடுகளுக்கும் இடையே எல்லையில் தகவல் தொடர்பு நல்ல முறையில் இருந்து வருகிறது. இரு நாடுகளும் எல்லையில் அமைதியையும்,  ஸ்திரத்தன்மையைம் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளன என அவர் தெரிவித்துள்ளார். 

 

click me!