குழந்தையை காப்பாற்றி ஸ்பைடர் மேனுக்கு என்னென்ன கிடைத்தது தெரியுமா?

 
Published : May 28, 2018, 04:31 PM ISTUpdated : Sep 19, 2018, 02:26 AM IST
குழந்தையை காப்பாற்றி ஸ்பைடர் மேனுக்கு என்னென்ன கிடைத்தது தெரியுமா?

சுருக்கம்

child rescue man get work citizenship

மாலி நாட்டை சேர்ந்தவர் மமூது கசாமா (22). இவர் வேலை தேடி பிரான்ஸ் நாட்டுக்கு வந்திருந்தார். பாரீசில் வடக்கு பகுதியில் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் முன்பு மக்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். எனவே கூட்டத்தை வேடிக்கை பார்க்க சென்றார். அங்கு கட்டிடத்தின் 4-வது மாடியில் பால்கனியை பிடித்தபடி 4 வயது குழந்தை அழுதபடி தொங்கிக் கொண்டிருந்தது.

அதை கீழே விழாமல் பக்கத்து வீட்டில் தங்கியிருக்கும் நபர் பிடித்துக் கொண்டிருந்தார்.  இந்நிலையில் குழந்தையை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. ஆனால் எந்தவித தயக்கமும் இன்றி கசாமா ஸ்பைடர் மேன் பாணியில் கட்டிடத்தில் ஏறினார். தீயணைப்பு படையினர் வருவதற்கு முன்பே குழந்தையை பத்திரமாக  குழந்தையை கசாமா காப்பாற்றி விட்டார். இவர் குழந்தையை காப்பாற்றிய வீடியோ வைரலாக இணையத்தில் பார்க்கப்படுகிறது

மமூது கசாமாவை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் நேரில் அழைத்து பாராட்டினார். பாரிஸ் மேயர் ஆன்னி ஹிடால்கோ பேஸ்புக் சமூக தளத்தில் வாழ்த்தி நன்றி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மமூது கசாமாவின் வீரதீரத்தை பாராட்டி கவுரவிக்கும் வகையில் அவருக்கு பிரான்ஸ் நாட்டின் நிரந்தர குடியுரிமை அளிப்பதாகவும், பாரிஸ் நகர தீயணைப்புத்துறையில் பணி வழங்கப்படும் என்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இன்று அறிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

உலகில் 3 பேருக்கு மட்டுமே உள்ள அரிதிலும் அரிதான புதிய இரத்த வகை கண்டுபிடிப்பு!
டிரம்புடன் போனில் பேசிய பிரதமர் மோடி! வர்த்தக பேச்சுவார்த்தைக்கு மத்தியில் முக்கிய ஆலோசனை!