சீனா செல்லவேண்டாம்... இந்தியர்களுக்கு சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை..!

By Thiraviaraj RMFirst Published Jan 25, 2020, 3:13 PM IST
Highlights

அத்தியாவசியமற்ற சீனப்பயணத்தை இந்தியர்கள் த்விர்க்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

அத்தியாவசியமற்ற சீனப்பயணத்தை இந்தியர்கள் த்விர்க்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரானா வைரஸ்  பாதிப்பு எதிரொலியால் இந்தியர்கள் யாரும் சீனப்பயணத்தை தவிர்க்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கொரனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், சீனாவில் இருந்து இந்தியா திரும்பிய 11பேர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்றும் 2 பேர் மும்பையை சேர்ந்தவர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தை சேர்ந்த தலா ஒருவரும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

Latest Videos

மும்பையைச் சேர்ந்த 2 பேருக்கு புனே ஆய்வுக் கூடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கொரனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவில் இருந்து 20 ஆயிரம் பேர் கேரளா திரும்பி உள்ள நிலையில் 7 பேருக்கு லேசான காய்ச்சல் அறிகுறி இருப்பதால் மருத்துவமனைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக கேரள அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் வீடுகளுக்கு சென்றுள்ள 73 பேர் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, வெளிநாடுகளில் இருந்து திரும்பும் நபர்களுக்கு கொரனா வைரஸ் என சந்தேகிக்கும் வகையில் அறிகுறிகள் தென்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க டெல்லி எம்ய்ஸ் மற்றும் மும்பை அரசு மருத்துவமனைகளில் தனிவார்டு அமைக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கொரனா வைரஸ்க்கு 41 பேர் உயிரிழந்துள்ளனர். கொரனா வைரஸ் பல நாடுகளுக்கு பரவி வரும் நிலையில் இந்தியாவிலும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

click me!