கொரோனாவை ஒழிக்கவே முடியாது... உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல்..!

By Thiraviaraj RMFirst Published Aug 15, 2020, 5:42 PM IST
Highlights

கொரோனா வைரஸ் பாதிப்பு உலகளவில் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், அதற்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதிலும் கடும் போட்டி நிலவுகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தைக் கண்டறிய உலகம் முழுவதும் மருத்துவ விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
 

கொரோனா வைரஸ் பாதிப்பு உலகளவில் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், அதற்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதிலும் கடும் போட்டி நிலவுகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தைக் கண்டறிய உலகம் முழுவதும் மருத்துவ விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இதனிடையே கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டதாக, சமீபத்தில் ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்திருந்தார். இந்த மருந்தை தன் மகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்ததாகவும் அவர் பெருமை பட்டிருந்தார். அடுத்த மாதம் முதல் மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கும் என்றும், கூடிய விரைவில் வெளிநாடுகளுக்கும் அவை ஏற்றுமதி செய்யப்படும் என்றும் ரஷ்யா அறிவித்து இருந்தது.
 
இதேபோல், கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கும் அமெரிக்கா, தடுப்பு மருந்து கண்டறிய தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனமும் கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளது. இந்நிலையில், உலக சுகாதார மருத்துவ விஞ்ஞானி வாஸ் நரசிம்மன் கூறுகையில், ’’பொதுவாக வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் மனித இனமே பின்னடைவில் தான் உள்ளது. உலகிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது ஒரே ஒரு வைரஸ் அது சின்னம்மை.

இதைத்தவிர வேறு எந்த வைரசும் மனிதனால் முற்றிலும்  ஒழிக்கப்படவில்லை. மருத்துவ விஞ்ஞானிகள் கூற்றுப்படி, கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல ஆண்டுகள் ஆகும். அதுவரை வைரசின் வீரியத்தை வேண்டுமானால் குறைக்கலாம் தவிர, ஒழிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். 

 

click me!