நூதன ஆன்லைன் மோசடி.. வீட்டிற்கு வந்து குவிந்த ஆணுறைகள்.. அதிர்ச்சியில் உறைந்த பெண் - என்ன நடந்தது?

By Ansgar R  |  First Published Sep 28, 2023, 9:06 PM IST

ஆன்லைன் மூலம் நமக்கு ஏற்ற பொருட்களை வாங்குவது வசதியாக இருந்தாலும், மக்கள் கவனமாக இல்லாவிட்டால், உங்கள் வங்கி கணக்கு காலியாவது உறுதி. இணைய வழியில் மோசடி செய்பவர்களின் வலையில் விழும் அபாயம் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் தான், ஒரு பெண் வினோதமான மோசடியில் சிக்கியுள்ளார். 


இந்த காலத்தில் ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்வது பொதுவானது. மக்கள் வீட்டில் வசதியாக அமர்ந்து தங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்குகிறார்கள். இதனால் நேரம் மிச்சமாகும் என்பது அவர்களின் வாதம். ஆன்லைன் ஷாப்பிங் அதிகரித்துள்ளதால், ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மக்களை ஏமாற்றி பணத்தை கொள்ளையடிக்கும் பல சம்பவங்கள் அவ்வப்போது வெளிச்சத்துக்கு வருகிறது.

பொதுவாக நாம் ஆன்லைனில் எதை ஆர்டர் செய்தாலும் அது வீட்டிற்கு வரும்போது ஒரு தனி உற்சாகம் இருக்கும். பார்சல் வந்தவுடனே அதை கழற்றி ஆர்டர் செய்த பொருள் சரியாக இருக்கிறதா என்று பார்க்கும் வரை நமக்கு நிம்மதி இருக்காது. அதே போல நாம் ஆர்டர் செய்யாமலே நம் வீட்டிற்கு பார்சல்கள் வந்து சேரும்போது ஆர்வமும், பயமும் ஏற்படுவது சகஜம் தான். 

Tap to resize

Latest Videos

375 வருடமாக கடலுக்கு அடியில் காணாமல் போயிருந்த 8வது கண்டம் கண்டுபிடிப்பு!

அதை போலத் தான் இந்தப் பெண்ணுக்கும், அவர் ஆர்டர் செய்யாத பொருள் வீட்டுக்கு வந்தது மட்டுமின்றி கணக்கில் இருந்த பணமும் எடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த பெண் கவலையடைந்துள்ளார்.

கனடா நாட்டை சேர்ந்த ஒன்டாரியன் ஜோயல் எங்கல்ஹார்ட்டின் கூற்றுப்படி, அவருக்கு ஆணுறைகள் அடங்கிய பெட்டி பார்சலாக வந்துள்ளது. அதில் சரியாக 1020 ஆணுறைகள் இருந்துள்ளன, ஆனால் அதை ஜோயல் எங்கல்ஹார்ட் ஆர்டர் செய்யவில்லை. தனக்கு அமேசானிலிருந்து மின்னஞ்சல் வந்தது போல் தெரிகிறது என்றும். ஆனால் அதை தானும் தன் கணவரும் ஆர்டர் செய்யாததால் அதை பற்றி பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்று அவர் கூறியுள்ளார். 

ஆர்டர் செய்யாமலே இத்தனை ஆணுறைகள் வந்தது ஒரு பக்கம் என்றால், ஆர்டர் செய்யாமலே அந்த பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டது தான் இன்னும் ஆச்சர்யமாக உள்ளது. இதுகுறித்து அமேசான் மற்றும் போலீசாரிடம் புகார் அளித்துள்ளதாக அந்த பெண் அளித்த அறிக்கையில் கூறியுள்ளார். 

அளவுக்கதிகமாக உப்பு உட்கொள்ளும் சிங்கப்பூரர்கள்! 10ல் 9 பேருக்கு உயர் ரத்த அழுத்தம்! ஆய்வில் தகவல்

click me!