கொரோனாவைவிட மிக்ககொடிய தாக்குதல்..!! 30 ஆயிரம் ஊழியர்களின் வேலையை பறிக்க முடிவு..!!

By Ezhilarasan Babu  |  First Published Apr 3, 2020, 6:47 PM IST

தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு இருப்பதன் காரணமாக விமான சேவை முடங்கி உள்ளதுடன், விமானங்கள் அனைத்தும் விமான தளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 
 


கொரோனா வைரஸ் எதிரொலியாக தங்கள் நிறுவனத்திலிருந்து  தற்காலிகமாக சுமார் 30,000 ஊழியர்களை பணி இடைநீக்கம் செய்ய பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது கொரோனா  வைரஸ் வேகமாக பரவு வரும் நிலையில் உலகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரசுக்கு உயிரிழந்துள்ளனர் .  இதனால் உலகிலுள்ள பல்வேறு நாடுகள் இந்த வைரஸ்  பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகின்றன . இந்நிலையில் அமெரிக்கா , இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகள் மற்ற நாடுகளை விட இந்த வைரசால் மிகக்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்நாடுகளில் ஏராளமானோர் வேலை இழந்து வருகின்றனர்.   

Latest Videos

அமெரிக்காவிலும் ஊரடங்கு உத்தரவால் லட்சக் கணக்கானவர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர், இந்த வைரசால் உலகில் நிலையற்றத்தன்மை ஏற்பட்டுள்ளது.   என்றும் இன்னும் பல மில்லன் ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும்  அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள வேலை இல்லா திண்டாட்டம் கொரோனாவைவிட கொடிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்று பொருளாதார வல்லுனர்கள் வேதனை தெரிவித்து வருகின்றர் . இந்நிலையில் பிரிட்டிஸ் ஏர்வேஸ் தவிர்க்க முடியாத காரணத்தால் தங்கள் ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது உலகளவில் முற்றிலுமாக சாலை, கப்பல் ,விமானம் என அனைத்து போக்குவரத்து சேவைகளுக்கும் முடங்கியுள்ளன.   தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு இருப்பதன் காரணமாக விமான சேவை முடங்கி உள்ளதுடன், விமானங்கள் அனைத்தும் விமான தளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

 ஆனால் ஊழியர்களுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டிய நிர்பந்தம் விமான நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ளது .  வருமான இல்லாமல் ஊழியர்களுக்கு ஊதியம் மட்டும் வழங்குவது நிறுவனத்தை கடன் சுமையில் சிக்க வைத்துவிடும் என்ற அச்சத்தாலும் ஏற்கனவே சந்தித்து வரும்  நஷ்டத்தை ஈடுகட்டவும் விமான நிறுவனங்கள்  பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கி உள்ளன இந்நிலையில்  பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் தங்களது நிறுவனத்தில் பணியாற்றிவரும் சுமார் 30,000 பேரை தற்காலிக பணி இடைநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது .  இந்த முடிவு குறித்து அந் நிறுவனத்தின் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடந்தி வருவதாகவும்  தகவல் வெளியாகி உள்ளது.  
 

click me!