சீனாவுக்கு அடுத்து உலகை அதிரவைக்கும் வியட்னாம்..!! தலையில் அடித்து அலறும் உலக நாடுகள்..!!

By Ezhilarasan Babu  |  First Published Apr 25, 2020, 9:59 AM IST

வியட்நாமின் மும்முரமாக நடைபெறும் பூனைக்கறி வியாபாரம்  மீண்டும் வுஹான் மார்க்கெட்டை நினைவுபடுத்துவதாக  செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். 


உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில்,  அந்த வைரசை தங்கள் நாட்டிலிருந்து முழுவதுமான விரட்டிய ஆசிய நாடுகளில் ஒன்றான  வியட்நாம் ,  இப்போது வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் கருப்பு பூனைகளை சாப்பிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறது . கருப்பு பூனைக்கறி  கொரோனா வைரசுக்கு நல்ல மருந்தாக செயல்படுகிறது என வியட்நாம் மக்கள் நம்புகின்றனர்,  இந்த நடவடிக்கை மீண்டும் சர்வதேச நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது ,  கொரோனா வைரஸ்  தோன்றியதாக கருதப்படும் சீனாவின் வுஹான் சந்தை முழுவதுமாக சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் ,  தற்போது வியட்நாம் மக்கள் பூனைக்கறியில்  இறங்கியிருப்பதுதான் அதற்குக் காரணம்... உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது 27 இலட்சத்துக்கும் அதிகமானோர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.   உலக அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  இரண்டு இலட்சத்தை நெருங்கியுள்ளது

Latest Videos

குறிப்பாக இத்தாலி ஸ்பெயின் அமெரிக்கா பிரான்ஸ் ஜெர்மனி பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன, ஆனால் இன்னும்கூட இந்த வைரஸ் மனித சமூகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது .  இந்த வைரஸை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன . கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் சீனாவின் ஹூபே  மாகாணம் வுஹானில் நாய்  குரங்கு பூனை மற்றும்  வவ்வால் எறும்புத்தின்னி போன்ற  விலங்குகளின் கறிகளை விற்பனைசெய்யும் சந்தையிலிருந்து தான் கொரோனா  உருவானது என  அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர் .  இந்நிலையில்  அதற்கு காரணமான சந்தையை மூட வேண்டும் என உலக நாடுகள் எச்சரித்த நிலையில்  வுஹான் சந்தையையும்  கடல் உயிரினங்கள் விற்பனை செய்யும் சந்தையையும் சீன அரசு மூடியது அந்த மார்க்கெட்டில் இருந்து உருவான வைரஸ்தான்  தற்போது  கொத்துக்கொத்தாய் உயிர்களை காவு வாங்கி வருகிறது

இன்னும் இந்த வைரஸ் தொடர்பான ஆராய்ச்சிகளில்  விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் ,  ஆனாலும் அதன் தன்மை குறித்து தங்களால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை என்றும் அது தன் இயல்பை மாற்றிக் கொண்டே இருக்கிறது என விஞ்ஞானிகள் கதிகலங்கி நிற்கின்றனர் . சீனாவில் தொன்றுதொட்டு இயங்கி வந்த வுஹான் சந்தை சுகாதார சீர்கேட்டில் உச்சமாக இருக்கிறது ,  பல மோசமான கிருமிகள் அங்கு உருவாகக்கூடும் என  பத்து ஆண்டுகளுக்கு முன்னரே விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தனர்.  ஆனால் அதை சீன அரசு கண்டுகொள்ளாததால் தற்போது உலகமே மரணப் பிடியில் சிக்கித் தவிக்கிறது .  இப்படி வுஹான் சந்தை மீதான உலக மக்களின் அச்சம் நீங்குவதற்குள் வியட்னாம் பூனைக்கறி  விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.இதுவரை  வியட்நாமில் கொரோனாவுக்கு அதிக அளவில் பாதிப்பு ஏற்படவில்லை,   268 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது . அவர்களில் 225 பேர் குணமாகி விட்டனர் 43 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர் ,  8 பேர் ஐசியுவில் உள்ளனர்.  ஆனால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. 

இதுவரை நாடு முழுவதும் 2.5 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது .  கொரோனாவின் கோரப்பிடிக்குள் வியட்நாம் சிக்கவில்லை என்றாலும்கூட தற்போது அங்கு ஒரு புது விதமான நம்பிக்கை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது அதாவது கருப்பு பூனை கறி சாப்பிட்டால் கொரோனா வைரஸ் தங்களை அண்டாது என்பதுதான் அது . இதனால் அங்கு ஏராளமான கருப்பு பூனைகள் வேட்டையாடப் படுகின்றன,  அவைகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக சந்தைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது .  இந்நிலையில் நேரடியாக களத்திற்கு சென்று ஆய்வு நடத்தியுள்ள  தீ பெஸ்ட் நியூஸ் செய்திக்குழு இதற்கான ஆதாரத்தை வெளியிட்டு உள்ளது.  அங்கு ஏராளமான கருப்பு பூனைகள் தோளோடு நெருப்பில் வேக வைக்கப்பட்டு ,  குழம்பாக சந்தைகளில் விற்கப்படுவதாக தெரிவித்துள்ளது.  ஹனோய் நகரத்தை மையமாகக் கொண்டுள்ள மக்கள் பூனைகளை கொடூரமான முறையில் வேட்டையாடி அதை வெயிலில் காயவைத்து ஆன்லைனில் விற்பனை செய்வதாகவும்  செய்திகள் வெளியாகி உள்ளன. 

இன்னும் பலர் பூனை கறிகளை வாங்கிச் சென்று அதைத் தங்கள் குழந்தைகளுக்கு அளிப்பது போன்ற புகைப்படங்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர் தற்போது  வியட்நாமின் மும்முரமாக நடைபெறும் பூனைக்கறி வியாபாரம்  மீண்டும் வுஹான் மார்க்கெட்டை நினைவுபடுத்துவதாக  செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.  பூனைக்கறி சாப்பிட்டால் கொரோனா குணமாகும் என கூறி வியாபாரம் நடக்கும் நிலையில்  இதுவரை அதற்கான அறிவியல் பூர்வமான எந்த ஆதாரமும் இல்லை.  நாய்  பூனை உள்ளிட்ட விளங்குகளின் இறைச்சி மற்றும் அதன் உற்பத்தி  உலகளவில் சுகாதாரத்தை கேள்விக்குறியாக்கும் என ஐநா எச்சரித்துள்ளது.  சந்தைகளில் சுகாதாரமற்ற முறையில் விலங்குகளை விற்பனை  செய்வதும் மக்கள் அதை வாங்குவதும் தடுக்கப்பட வேண்டும் என உலகளவில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.  சீனாவே  நாய் மற்றும் பூனை உள்ளிட்ட விலங்குகளை  உண்பதற்கு தடைவிதித்துள்ளது.  ஆனாலும் வியட்நாம் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில்  இந்த பழக்கம் மேலும் அதிகரித்திருப்பது  உலக நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. 
 

click me!