பெர்முடா முக்கோணத்தின் 100 ஆண்டு மர்மம் விலகியது..!!! புதிய தகவல்களால் பரபரப்பு

Asianet News Tamil  
Published : Oct 23, 2016, 04:40 AM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
பெர்முடா முக்கோணத்தின் 100 ஆண்டு மர்மம் விலகியது..!!! புதிய தகவல்களால் பரபரப்பு

சுருக்கம்

பெர்முடா பகுதியில் மாயமாகி வரும் கப்பல்கள், விமானங்கள் ஆகியவற்றின் மர்மத்துக்கு விஞ்ஞானிகள் தற்போது விடை கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

விமானங்கள், கப்பல்களை விழுங்கிய பெர்முடா முக்கோணம் பற்றிய மர்மம் நூற்றாண்டு காலமாக நீடிக்கிறது. செயற்கைகோள், நவீன ரேடார் கருவிகள் என நவீன தொழில்நுட்பத்தின் உச்சத்தில் இருந்தும், பெர்முடா முக்கோணத்தின் மர்மத்தை உடைக்க முடியாத நிலை இருந்து வருகிறது.

இந்த நிலையில், பெர்முடா முக்கோணத்தில் விமானங்கள் மற்றும் கப்பல்கள் காணாமல் போவதற்கான புதிய காரணத்தை விஞ்ஞானிகள் கூறியிருக்கின்றனர். இதன்மூலம், பெர்முடா முக்கோணத்தின் பன்னெடுங்கால ரகசியங்கள் உடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெர்முடா முக்கோண பகுதி

வட அட்லாண்டிக் கடல் பகுதியின் பெர்முடா, மியாமி[வடக்கு புளோரிடா] மற்றும் போர்டோ ரிகா தீவு பகுதிகளுக்கு இடையிலான முக்கோண வடிவிலான கடல் பகுதியை பெர்முடா முக்கோணம் என்று அழைக்கின்றனர். இது 5 லட்சம் சதுர மைல் பரப்பு கொண்ட அபாயகரமான பகுதி.

சாத்தான் கடல்

இந்த கடல் பகுதியை கடந்து செல்லும் விமானங்கள், கப்பல்கள் மர்மமான முறையில் காணாமல் போகின்றன. இதுவரையில் நூற்றுக்கணக்கான கப்பல்களும், 70-க்கும் மேற்பட்ட விமானங்களும் இந்த பகுதியில் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த மர்மபகுதியில் சிக்கி உயிரை இழந்துள்ளனர். எனவே, இதனை சாத்தானின் முக்கோணம் என்று அழைக்கின்றனர்.

காந்த விசை

இந்த பகுதியில் இருக்கும் அதீத காந்த விசை காரணமாக, விமானங்களும், கப்பல்களும் கவர்ந்து உள் இழுக்கப்படுவதாக இதுவரை கருதப்பட்டு வருகிறது. வேறு சிலர் அந்த பகுதியில் ஏற்படும் சூறாவளி காரணமாக கப்பல்கள் காணாமல் போவதாக கூறுகின்றனர்.

முதல் விபத்து

வரலாற்றில் பெர்முடா முக்கோணத்தில் பதிவான முதல் விபத்து 1908ம் ஆண்டு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 1918ம் ஆண்டில் அமெரிக்காவின் ‘யு.எஸ்.எஸ். சைக்கிளோப்ஸ்’ என்ற கப்பல் இந்த பகுதியில் காணாமல் போனது. இந்த கப்பலில் பயணித்த 306 பேரின் கதி என்ன என்று இன்றுவரை தெரியவில்லை. எவ்வித தடயமும் சிக்கவில்லை.

தொடர்கதை

கடந்த 1950ல் இருந்து 1975ம் ஆண்டு வரை 428 கப்பல்களும், படகுகளும் இந்த பகுதியில் மாயமாகிவிட்டதாக ஒரு தகவல்கள் தெரிவிக்கின்றன.  1945ம் ஆண்டில்பெர்முடா முக்கோண பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க கடற்படை விமானம் ஒன்று மாயமானது. இந்த விமானத்தை தேடுவதற்கு அனுப்பப்பட்ட குழுவினர் சென்ற விமானமும் மாயமானது. இதுபோன்று, பெர்முடா முக்கோணத்தை ஆய்வு சென்ற குழுவினரின் கப்பலும் மாயமானது.

இந்த பகுதியில் இருக்கும் ஏதோ ஒரு விதமான இயற்கைக்கு மாறான சக்தியால்தான் விமானங்களும், கப்பல்களும் மூழ்குவதாக கருதப்படுகிறது. பெர்முடாமுக்கோணத்தின் வழியாக சென்று கடந்த ஒரு சிலரும், அந்த பகுதியில் திடீர் ஒளிக்கற்றைகளை காண முடிந்ததாகவும், திசைக்காட்டி கருவிகள் செயல் இழந்து போவதாகவும் கூறியிருந்தனர்.

பெர்முடா முக்கோண கடல்பகுதியில் அடியில் ராட்சத பள்ளங்கள் இருப்பதாக நார்வே நாட்டை சேர்ந்த ஆர்க்டிக் பல்கலைகழக ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். அந்த நாட்டை ஒட்டி, வட மத்திய பாரன்ட் கடல்பகுதியில் உள்ள இந்த ராட்சத பள்ளங்கள் 800 மீட்டர் நீளமும், 150 அடி ஆழமும் கொண்டதாக  இருக்கிறது என தெரிவிக்கின்றனர்.

காரணம்

நார்வே நாட்டு கடலோர பகுதியில் அபரிமிதமான மீத்தேன் படிமங்கள் நிறைந்துள்ளன. இந்தநிலையில், பெர்முடா முக்கோண கடற்பகுதியில் இருக்கும் ராட்சத பள்ளங்கள் வழியாக அந்த மீத்தேன் வாயு கசிவு ஏற்படுவதாகவும், அந்த கசிவின் போது பள்ளங்களில் பெரிய வெடிப்புகள் ஏற்படுகின்றன. மேலும், கடல் நீரின் அடர்த்தியை குறைத்து கப்பல்கள் மிதக்க முடியாத நிலையை ஏற்பட செய்வதாகவும் கூறுகின்றனர். மேலும், இந்த பள்ளங்களிலிருந்து வெளிப்படும் மீத்தேன் வாயு காரணமாகவும், அபரிமிதமான வெப்பம் காரணமாகவும் அந்த பகுதியில் செல்லும் விமானங்களும், கப்பல்களும் விபத்தில் சிக்குவதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த கடற்பகுதியின் கடலில் அடியில் காணப்படும் உயிரோட்டமான எரிமலையால் தான் கப்பல்கள் மாயமாகி வருவதாகம், கடந்த 2012 ஆண்டில் விஞ்ஞானிகள் அறிவித்து இருந்தனர். 

புதிய தகவல்

இது குறித்து அண்மையில் ஆய்வு நடத்திய  இங்கிலாந்து விஞ்ஞானிகள், இதற்கான மர்மமத்தை கண்டறிந்துள்ளனர். இந்த பெர்முடா பகுதியில் அறுங்கோண மேகங்கள் காணப்படுவதாகவும், அதனால் அந்த பகுதியில்  நீர் சுழற்சி ஏற்படுவதாகவும் அறிவித்து உள்ளனர். 

இதனையே அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாநில பல்கலைக்கழக வானியல் செயற்கைக்கோள் ஆய்வாளர் டாக்டர் ஸ்டீவ் மில்லரும் உறுதிபடுத்தியுள்ளார். 

பெர்முடா கடல் மட்டத்தில் உள்ள காற்று 170 மைல் வேகத்தில் இருப்பது கண்டறியபட்டுள்ளது.  இதனால் 45 அடி உயரத்திற்கு சக்தி வாய்ந்த அலைகள் உருவாகி, மேல் எழும்பும் போது அவை வெடிகுண்டுகள் போல் செயல்பட்டு விமானங்களை நிலைகுலைத்து கடலில் விழச்செய்வதும் உறுதிபடுத்தபட்டுள்ளது. 

மேலும் இங்கு தோன்றும் அறுங்கோண காற்று  வடிவங்கள், மணிக்கு 170 மைல் வேகத்தில் விமான குண்டுகளை போல் செயல்பட்டு கப்பல்களை கவிழ்த்தும், விமானங்களை கடலில் கீழே தள்ளியும் தடம் தெரியாமல் மறைத்து விடுவதாகவும் மற்றொரு வானியல் ஆய்வாளர் ராண்டு செர்வனியும் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

அமெரிக்காவை நம்ப முடியாது..! போரில் சமரசமே கிடையாது..! அமெரிக்காவுக்கு ஈரான் அதிரடி எச்சரிக்கை..!
ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது.. 100 ராணுவ வீரர்கள் கதி என்ன? அதிர்ச்சி தகவல்!