சிங்கப்பூரில் தற்போது வீசும் காற்றின் திசை மாறினால், புகைமூட்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது. மக்கள் வெளியே செல்ல திட்டமிடுகையில் காறின் தரக்குறியீட்டை செக் செய்தபின் வெளியே செல்ல அறிவுறுத்தியுள்ளது.
சிங்கப்பூரில் தற்போது வீசும் காற்றின் திசை மாறினால், புகைமூட்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது. மக்கள் வெளியே செல்ல திட்டமிடுகையில் காறின் தரக்குறியீட்டை செக் செய்தபின் வெளியே செல்ல அறிவுறுத்தியுள்ளது.
இந்தோனேசியாவின், சுமத்ராவில் சில இடங்களில் தீப்பற்றி எரிகிறது. மேலும், இது கடந்த சில நாட்களாக தீப்பற்றி எரியும் இடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து, சுமத்ராவின் தெற்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் மிதமானது முதல் கடுமையான புகைமூட்டம் நிலவுவதாக இந்தோனேஷிய வானிலைமையம் தெரிவித்தது.
இந்நிலையில், சிங்கப்பூரில் இப்போதைய காற்று வீசும் போக்கைப் பார்க்கையில், சிங்கப்பூர் கடும் புகைமூட்டத்தால் பாதிக்கப்படும் வாய்ப்பு இல்லை என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை காற்று வீசும் திசை மாறுபட்டால் காற்றுத் தரக் குறியீட்டு எண் (பிஎஸ்ஐ - BSI) மிகவும் மோசமாகக்கூடும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் எச்சரித்துள்ளது.
சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் தீபாவளி கொண்டாட்டம்! செப் 30 முதல் தொடக்கம்!
சிங்கப்பூரில் தற்போதைய நிலவரப்படி, சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் பிஎஸ்ஐ காற்று தரக் குறியீட்டு எண் 81ஆக உள்ளது. இது மிதமான நிலையைக் குறிக்கிறது.
இதனிடையே, பொதுமக்கள் வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் திட்டமிடும்போது, திட்டமிடுகையில் காறின் தரக்குறியீட்டை செக் செய்தபின் வெளியே செல்ல அறிவுறுத்தியுள்ளது. www.haze.gov.sg என்ற இணையத்தளத்தில் காற்று தரக் குறியீட்டை தெரிந்துகொள்ளலாம் என்றும் சிங்கப்பூர் சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் விரைவில் இரு கட்டங்களாக உயரப்போகும் தண்ணீர் கட்டணம்! முழு விபரம் உள்ளே!
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D