அடி தூள்...இந்தியாவிடம் மோதாதே, பாகிஸ்தானை எச்சரித்தது அமெரிக்கா...!!! மோடியுடன் கைகோர்த்தார் அதிபர் ட்ரம்ப்...!!

By Asianet Tamil  |  First Published Sep 23, 2019, 1:15 AM IST

தீவிரவாதத்தை ஒழிப்பதில் அமெரிக்கா எப்படி செயல்படுகிறதோ அதேபோல் இந்தியாவும் செயல்பட்டு வருகிறது என ட்ரம்ப் கூறினார்


அமெரிக்காவுக்கு எப்படி தன் நாட்டு எல்லைப் பாதுகாப்பு முக்கியமோ,அதேபோல் இந்தியாவுக்கும் அதன் எல்லை பாதுகாப்பு  முக்கியம் என ஹாஸ்டனில் நடைபெற்ற ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பேசியபோது அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். இந்தியா பாகிஸ்தானிடையே காஷ்மீர் பிரச்சனை இருந்துவரும் நிலையில் அதிபர் ட்ரம்ப்பின் இந்த கருத்து இந்தியாவிற்கு சாதகமானது என கருதப்படுகிறது 

Latest Videos

அமெரிக்காவின்  ஹாஸ்டன் கால்பந்து மைதானத்தில்  அமெரிக்க வாழ் இந்தியர்களின் சார்பில் ஹவுடி மோடி என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யபட்டிருந்தது. அதில்   இந்திய பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார், சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியர்கள் இரு தலைவர்களின் பேச்சைக்கேட்க அரங்கத்தில் திரண்டிருந்தனர், முன்னதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உரையாற்றினார்.  அப்போது பேசிய அவர், எப்போதும் இல்லாத அளவிற்கு அமெரிக்கா இந்தியா இடையேயான உறவு வலுபெற்றுள்ளது என்றார்.

 

தொடர்ந்து பேசிய அவர், அமெரிக்க வாழ் இந்தியர்கள் அமெரிக்காவின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளனர். அமெரிக்காவின் மருத்துவத்துறையில் இந்தியர்களின் பங்கு அளப்பறியது என்றார், குறிப்பான பிரதம் மோடி  இந்தியாவை சிறப்பாக வழிநடத்தி கொண்டிருக்கிறார். அவரின் நல்ல பல திட்டங்களால் கோடிக்கணக்கான மக்கள் பலனடைந்துள்ளனர் என்றார். அவரின் முயற்ச்சிகள் தொடர்ந்து நடைபெறட்டும், அவரின் செயல்களுக்கு என மனமார்ந்த பாராட்டுகள் என்றார். என்றார், அறிவியல் மற்றும் புதிய தொழில்நுட்ப கண்டுபடிப்புகளில் இந்தியா சர்வதேச அளவில் சிறந்து விளங்குகிறது, விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட அமெரிக்கா விரும்புகிறது என்றார். 

இந்தியா அமெரிக்காவிற்கிடையே பல ஒற்றுமைகள் உள்ளது. இரண்டு நாடுகளும் ஜனநாயகத்தை அடித்தளமாக கொண்டு இயங்கக்கூடிய நாடுகள், தீவிரவாதத்தை ஒழிப்பதில் அமெரிக்கா எப்படி செயல்படுகிறதோ அதேபோல் இந்தியாவும் செயல்பட்டு வருகிறது என ட்ரம்ப் கூறினார். அமெரிக்கா தன் எல்லைப் பாதுகாப்பை மிக முக்கியமானதாக கருதுகிறது  அமெரிக்காவைப்போலவே இந்தியாவுக்கும் அதன் எல்லை பாதுகாப்பு மிக முக்கியம் என்று ட்ரம்ப் கூறினார் அப்போது அரங்கத்திலிருந்த ஒட்டு மொத்த இந்தியர்களும் எழுந்து நின்று ட்ரம்பின் பேச்சை கைத்தட்டி வரவேற்றனர். 
 

click me!