வெள்ளை மாளிகையின் கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்த கொரோனா..!! அதிர்ச்சியில் உறைந்த அமெரிக்கா..!!

By Ezhilarasan Babu  |  First Published May 9, 2020, 1:12 PM IST

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பாதுகாப்பு அதிகாரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்து வெள்ளை மாளிகை ஊழியர்களுக்கு தினந்தோறும் வைரஸ் பரிசோதனை செய்ய ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார் ,


அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பாதுகாப்பு அதிகாரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்து வெள்ளை மாளிகை ஊழியர்களுக்கு தினந்தோறும் வைரஸ் பரிசோதனை செய்ய ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார் ,  உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த அமெரிக்காவையும் கபளீகரம் செய்து வருகிறது ,  எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்கா இந்த வைரஸால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது,  இதுவரை அமெரிக்காவில் கொரோனா  தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்தை தாண்டியுள்ளது . இதுவரை சுமார் 78 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.  உலகில் ஏற்பட்டுள்ள மூன்றில் ஒரு பங்கு பாதிப்பு அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. 

Latest Videos

ஆனால் இன்னும்கூட அமெரிக்காவில்  இந்த வைரஸ் கோரத்தாண்டவம் ஓய்ந்தபாடில்லை,  அமெரிக்கா இந்த வைரசை கட்டுபடுத்த எத்தனையோ முயற்சிகளை  மேற்கொண்டு வந்தாலும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை , அதே போல் தொடர் ஊடரங்கால் மறுபுறம் அமெரிக்காவின் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதுவரை அங்கு 2 கோடி பேர் வேலை இழக்கும் அபாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர் ,  எனவே வைரஸ் தாக்கம் குறைவாக உள்ள சில மாகாணங்களில் ஊரடங்கை தளர்த்திக்கொள்ள அதிபர் ட்ரம்ப் அந்தந்தமாகாண ஆளுனர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளார்.   அமெரிக்காவின் எல்லா மாகாணங்களிலும் சுற்றிச் சூழன்றடித்து வந்த கொரோனா வைரஸ் தற்போது வெள்ளை மாளிகையில் கதவுகளையும் தகர்த்து உள்ளே நுழைந்துள்ளது.அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ராணுவ அதிகாரி ஒருவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது , 

அதனைத் தொடர்ந்து  துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் உள்ளிட்ட  வெள்ளை மாளிகை ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது,  இச் சோதனை அன்றாடம் செய்யவும் அதிகாரிகளுக்கு வெள்ளை மாளிகை  உத்தரவிட்டுள்ளது.   அதே நேரத்தில் அதிபர் ட்ரம்ப்  மற்றும் அவருக்கு நெருக்கமாக உள்ள அதிகாரிகளுக்கும் அனைத்து வெள்ளை மாளிகை ஊழியர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது ,   டிரம்புக்கு இதுவரை கொரோனா தொற்று  இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ட்ரம்ப்,  எனது ராணுவ அதிகாரி மிகவும் நல்ல மனிதர் , ஆனால் இதுவரை  அவருடன் நான் அவ்வளவாக நெருங்கி பழகியதில்லை ,    ராணுவ அதிகாரி மூலமாக எந்த ஊழியர்களுக்கும் இதுவரை கொரோனா பரவவில்லை   ஆனாலும் நாங்கள் அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள முடிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார் . 

 

click me!