மாத்திரை கைக்கு வந்தவுடன் வேலையை காட்ட ஆரம்பித்த அமெரிக்கா..!! ட்ரம்ப் போட்ட அதிரடி உத்தரவு..!!

By Ezhilarasan Babu  |  First Published Apr 10, 2020, 11:38 AM IST

அதாவது முகக் கவசம் ,  கையுறைகள் ,  வெண்டிலேட்டர்கள் போன்ற மருத்துவ பொருட்களுக்கு தட்டுப்பாடு  உள்ளது,  இதனால் அமெரிக்க தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய கூடாது என அமெரிக்கா அதிரடியாக தடை விதித்துள்ளது . 


அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் அங்கு மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது,  அமெரிக்காவில் மருத்துவ பொருட்களுக்கு கடுமையான  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமெரிக்கா அதிரடியாக இந்நடவடிக்கை எடுத்துள்ளது.  சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது,  உலக அளவில் 15 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 90  ஆயிரத்தை  நெருங்கியுள்ளது ,   இத்தாலி ,  ஸ்பெயின் ,  பிரான்ஸ் ,  இங்கிலாந்து ,  அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.  எந்த  நாடுகளிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் இந்த வைரசின் தாக்கம் அதிகமாக உள்ளது .

 

Latest Videos

இதுவரையில் அமெரிக்காவில் 4 லட்சத்து 66 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது ,  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்துள்ளது உலக வல்லரசான அமெரிக்கா இந்த வைரசை கட்டுபடுத்த முடியாமல்  திகைத்து வருகிறது ,  அதுமட்டுமல்லாது அமெரிக்காவில் லட்சக்கணக்கான மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு சிகிச்சை வழங்க முடியாத நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டுள்ளது . அங்கு மருத்துவ உபகரணங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதே இதற்கு காரணம்,   அங்கு போதிய அளவில் மருத்துவ படுக்கைகளும் , மருத்துவ  உபகரணங்களும் இல்லாத நிலை உள்ளதால் அங்கு சிகிச்சை அளிக்கும்  மருத்துவர்கள் மற்றும்  சுகாதார ஊழியர்களுக்கும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது . அதாவது முகக் கவசம் ,  கையுறைகள் ,  வெண்டிலேட்டர்கள் போன்ற மருத்துவ பொருட்களுக்கு தட்டுப்பாடு  உள்ளது,  இதனால் அமெரிக்க தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய கூடாது என அமெரிக்கா அதிரடியாக தடை விதித்துள்ளது . 

இதன் மூலமாக அமெரிக்காவில் உள்ள மக்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க முடியும் என்றும் அமெரிக்கா நம்புவதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது ,  சமீபத்தில் கொரோனா  சிகிச்சைக்கு வழங்கப்படும்  ஹைட்ராக்ஸிக்குளோரோகுயின்  மாத்திரைகளை அமெரிக்கா இந்தியாவிடம் கோரியிருந்த நிலையில் ,  இந்தியா மருந்து பொருட்களை வெளிநாடுகளுக்கு  ஏற்றுமதி செய்ய தடை விதித்திருப்பதாக கூறியது, இதனால் அமெரிக்காவுக்கு மருந்து கிடைக்காத நிலை ஏற்பட்டது,  இதில் அதிர்ச்சியடைந்த அமெரிக்கா  ஆர்டர் செய்தபடி  அமெரிக்காவுக்கு  மருந்து வழங்கப்படவில்லை என்றால்  இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என ட்ரம்ப்  எச்சரித்தார்,  அதனையடுத்து  இந்தியா உடனடியாக தடையை நீக்கி அமெரிக்காவுக்கு  ஹைட்ராக்ஸிக்கிளோரோகுயின் மாத்திரைகளை அனுப்பியதுடன்,  மனிதாபிமான அடிப்படையில் இதை செய்வதாக அறிவித்தது  ,  இந்நிலையில் தங்களது நாட்டில் ஏற்பட்டுள்ள  மருத்துவ பொருட்கள் பற்றாக்குறையை சீர் செய்ய அமெரிக்கா இந்தியா பாணியில் மருந்துப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி இல்லை என கூறு ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது .

 

 

click me!