
கொலராடோவில் உள்ள விமானப்படை அகாடமியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் அதிபர் ஜோ பிடன் கலந்துகொண்டு சாகச வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கினார். அப்போது, மேடையில் ஒரு தடையைத் தாண்டிய அதிபர் கால் தடுக்கி விழுந்தார். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்க்ளில் பரவி கேலிக்கூத்தானது.
இந்த சம்பவம் தொடர்பாக, வெள்ளை மாளிகை தவகல் தொடர்பு இயக்குனர் பென் லாபோல்ட், ஒரு ட்வீட் செய்துளார். அதில், அதிபர் ஜோ பிடன் நலமுடன் இருக்கிறார், அவர் தடுக்கி விழ காரமாக இருந்தது ஒரு சிறு மணல் மூட்டை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பட்டமளிப்பு விழாவுக்கு பின்னர் ஏர்ஃபோர்ஸ் ஒன் மற்றும் மரைன் ஒன் மூலம் வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய அதிபர் ஜோ பிடனுக்கு மற்றொரு துரதிர்ஷ்டம் ஏற்பட்டது. அவர், ஹெலிகாப்டரில் இருந்து இறங்கும் போது அதன் கதவில் மோதினார். காயம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவித்தார்.