தன்னுடைய நிர்வாண புகைப்படங்களை ஒவ்வொருவருக்கும் அனுப்புகிறேன் அதற்கு அவர்கள் பத்து டாலர்கள் அனுப்ப வேண்டும் என கூறியிருந்தார் .
ஆஸ்திரேலிய காடுகளில் ஏற்பட்ட தீயை அணைக்க தன் நிர்வாண படங்கள் மூலம் மாடல் அழகி ஒருவர் நிதி திரட்டி உள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 5 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக அவர் தகவல் வெளியிட்டுள்ளார் கடந்த சில வாரமாக ஆஸ்திரேலிய காடுகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது . லட்சக் கணக்கான உயிர்கள் தீயில் கருகின. இதில் ஏராளமான மரம் , செடி , கொடி என அனைத்தும் எரிந்து சாம்பலாயின . அந்நாட்டு ராணுவம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க மிகக் கடுமையாக போராடி வருகின்றனர்.
எவ்வளவு போராடியும் தீயை அணைப்பது மிகப் பெரும் சவாலாகவே இருந்து வந்தது இந்நிலையில் அதிர்ஷ்டவசமாக மழை பெய்ய தொடங்கியுள்ள நிலையில் தீ கொஞ்சம் கொஞ்சமாக அணைய தொடங்கியது. இந்நிலையில் காட்டுத்தீ மீட்பு பணிக்காக தன்னுடைய நிர்வாண புகைப்படங்களை அனுப்பி அதன் மூலம் சுமார் 7 லட்சம் டாலர்களை மாடல் ஒருவர் வசூல் செய்துள்ளார் . அமெரிக்காவைச் சேர்ந்த மாடல் கைலன் வார்ட் தன்னுடைய நிர்வாண புகைப்படங்களை அனுப்பி நிதி திரட்டி கொடுத்துள்ளார் .
முதலில் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து கருத்து பதிவிட்டவர் தன்னுடைய நிர்வாண புகைப்படங்களை ஒவ்வொருவருக்கும் அனுப்புகிறேன் அதற்கு அவர்கள் பத்து டாலர்கள் அனுப்ப வேண்டும் என கூறியிருந்தார் . இந்த தொகையை தீ மீட்பு பணிக்காக பயன்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதன்படி அடுத்த இரண்டு நாட்களில் அவருக்கு இந்திய ரூபாய் மதிப்புப்படி 5 கோடி வசூல் ஆனது இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர்,
பணம் அனுப்பியவர்களுக்கு மிக்க நன்றி , என்னால் இதை நம்பவே முடியவில்லை , என்னுடைய டுவிட்டின் எதிரொலியாக ஆஸ்திரேலிய காட்டு தீக்கு 7 லட்சம் டாலர் வசூல் ஆகி உள்ளது என்று தெரிவித்துள்ளார் . ஆனால் இதைப் பலரும் விமர்சித்து வருகின்றனர், அதாவது தனிப்பட்ட முறையில் தனக்கு பணம் தேவை என்பதால் அந்த அழகி இப்படி வசூல் செய்கிறார் எனவும் விமர்சித்துள்ளனர் . அதற்கு பதில் அளித்துள்ள அவர் தனக்காக இந்த பணத்தை கேட்கவில்லை , பணம் அனுப்ப விரும்புபவர்கள் ஆஸ்திரேலிய காட்டுத்தீ மீட்பு நிவாரண உதவி மையத்திற்கே நேரடியாக அனுப்பலாம் அதற்கான ஆதாரத்தை மட்டும் எனக்கு அனுப்புங்கள் போதும் என்று தெரிவித்துள்ளார் .