சிங்கள வெறிபிடித்த, கொலைகார ராணுவ தளபதி...!! உள்ளே வராதே என தடைபோட்டது அமெரிக்கா...!!

By Ezhilarasan BabuFirst Published Feb 16, 2020, 3:56 PM IST
Highlights

ஐநா மற்றும் பிற அமைப்புகளால் சவேந்திர சில்வா மீது சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உறுதி செய்யப்பட்டதாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார் . 

இலங்கையில் நடந்த போர்க்குற்றம் விவாகரத்தை முன்வைத்து நாட்டின் ராணுவ தளபதி சவேந்திர சில்வா தங்கள் நாட்டுக்குள் நுழைய கூடாது என அமெரிக்கா தடை விதித்துள்ளது .   இலங்கையின் ராணுவ  தளபதியாக கடந்த ஆண்டு  நியமிக்கப்பட்டவர்  சவேந்திர சில்வா , இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது சர்வதேச போர் விதிமுறைகளை மீறி நடந்துகொண்டதாகவும் அங்கே மனித உரிமை மீறல்கள்  அதிக அளவில் நடந்ததாகவும்  ஐநா மனித உரிமை ஆணையம் குற்றம்சாட்டி இருந்தது . 

இதில் அப்பாவி பொதுமக்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டதுடன் ,  கொத்துக் குண்டுகளை வீசி இலங்கை ராணுவம் கொடூரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது .  போர் உச்சகட்டத்தில் இருந்தபோது சவேந்திர சில்வா  இலங்கையின் வடக்கு பிராந்தியத்தில் இயங்கிவந்த ராணுவப் பிரிவு ஒன்றுக்கு தளபதியாக செயல்பட்டு வந்தார் ,  அப்போது இலங்கை ராணுவத்தினருக்கு கட்டுப்பாடற்ற சுதந்திரம் கொடுத்ததுடன் கடுமையான போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றச் சாட்டு உள்ளது .  

இந்நிலையில் சவேந்திர சில்வா மீதான போர்க்குற்றங்களை முன்வைத்து அவர் தங்கள் நாட்டுக்குள் நுழைய அமெரிக்கா தடை விதித்துள்ளது . இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள அந்நாட்டின் வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ ,  ஐநா மற்றும் பிற அமைப்புகளால் சவேந்திர சில்வா மீது சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உறுதி செய்யப்பட்டதாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார் . இக்குற்றச்சாட்டு உள்ள இவர் அமெரிக்காவுக்கு வர தடை விதிப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.  இவர் ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்ட போதே இவருக்கு எதிரான சர்வதேச நாடுகள் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடதக்கது . 

click me!