அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்யிருக்கும் முக்கிய பிரசாரம்

Asianet News Tamil  
Published : Nov 08, 2016, 09:36 AM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்யிருக்கும் முக்கிய  பிரசாரம்

சுருக்கம்

அமெரிக்க அதிபர் தேர்தல் என்னதான் அதிபர் வேட்பாளர்கள் பிரசாரம் செய்தாலும், இந்த குறிப்பிட்ட விஷயங்களை முன்வைத்தே அவர்களின் பேச்சு சாராம்சம் அனைத்தும் இருக்கும். இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயலும் வேட்பாளர்களுக்கே மக்களின் ஆதரவு உண்டு.

1. இனவெறி மற்றும் துப்பாக் சூடு

அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக கருப்பினத்தவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவங்கள் தேர்தலில்முக்கியமானதொரு விஷயமாக முன்வைக்கப்படுகிறது. இனவெறியுடன் வெள்ளை இன போலீசாரால் கறுப்பினத்தவர்கள் கொல்லப்படுகிறார்கள் என குற்றச்சாட்டு இருக்கிறது.

2. வேலைவாய்ப்பு

அமெரிக்காவில் வேலையின்மை நாளுக்கு நாள் அதிகரித்துவருவது தேர்தலில் பிரதான காரணியாக பேசப்படுகிறது. வெளிநாட்டவர்கள் உள்நாட்டினரின் வேலைவாய்ப்புகளை பறித்துவிட்டார்கள், அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கப்படும் என டிரம்ப் பேசிவருகிறார். மாறாக ஹிலாரி, உள்கட்டமைப்புக்கு முக்கியத்துவம், பல்கலையில், கல்லூரிகளில் மாணவர்கலுக்கு இலவச கல்வி, நடுத்தர வர்கத்துக்குவரிகுறைக்கப்படும் என பேசி வருகிறார்.

3. பருவநிலை மாற்றம்

உலகில் அதிகரித்துவரும் வெப்பம் ஆதலை தடுக்கும் வகையில், நடவடிக்கை எடுக்கும் அதிபருக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. புவி வெப்பம் ஆதலைத் தடுக்கும் வழிமுறைகளை சிந்திக்க வேண்டும் என்று  ஹிலாரி பேசுகிறார். டிரம்ப் புவிவெப்பமயமாதல் வீண்புரளி என்கிறார்.

4. கருக்கலைப்பு

அமெரிக்காவில் கருக்கலைப்பு ஆதரவான சட்டம் தேவையில்லை. திட்டமிட்ட குடும்பத்துக்கு வழிதேட வேண்டும் என்பது ஹிலாரியின்வாதமாகும். ஆனால், டிரம்ப் கருக்கலைப்பு சட்டமாக்கப்பட வேண்டும் என்கிறார்.

5. சீனா

தென் சீனக்கடல் பிரச்சினையில், சீனாவுக்கு எதிராக அமெரிக்காவின் தலையீடு, சீனாவின் ஒழுங்குமுறையற்ற வர்த்தகச் செயல்பாடுகள் முக்கியமாகக் கருதப்படுகிறது. சர்வதேச விதிகளுக்கு கட்டுப்பட்டு சீனா நடக்க வேண்டும் என வலியுறுத்தப்படும் என ஹிலாரி பிரசாரம் செய்தார். ஆனால், சீனா, தனது பணமதிப்பை குறைத்து ஏற்றுமதியை அதிகப்படுத்தி, இறக்குமதிக்கு கட்டுப்பாட்டை விதித்துவிட்டது என்கிறார் டிரம்ப்.

6. அகதிகள்

சிரியாவில் இருந்து வரும் அகதிகளுக்கு விரிவான திட்டம் உருவாக்கப்படும், 65 ஆயிரம் அகதிகள் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் என்று ஹிலாரிகூறுகிறார். அகதிகளுக்கு இடமில்லை என டிரம்ப் கடுமையாக எதிர்த்து வருகிறார்.

7. துப்பாக்கி.

அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கிக் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த சட்டம் கொண்டு வர வேண்டும் என்பது ஹிலாரியின்நிலைப்பாடு. ஆனால், டிரம்ப், தனிநபர் பாதுகாப்புக்கு துப்பாக்கி அவசியம், தனிநபர் உரிமை பாதிக்கப்படக்கூடாது என்கிறார்.

8. ஒபாமா ஹெல்த் கேர்

ஒபாமா ஹெல்த் கேர் சட்டப்படி அமெரிக்க குடியுரிமைப் பெற்றவர்கள், சாமானியர்கள், நடுத்தரமக்களுக்கு இந்த திட்டம் மறுக்கப்படாது, ஆட்சிக்கு வந்தால் தொடரும் என ஹிலாரி கூறுகிறார். ஆனால், இந்த திட்டத்தை தொடர்ந்து குடியரசுக்கட்சியினரும், டிரம்பும் எதிர்த்து வருகின்றனர்.

 

 

 

PREV
click me!

Recommended Stories

சிரியா மசூதியில் பயங்கரம்! தொழுகையின் போது நடந்த கொடூர தாக்குதல்.. 8 பேர் உடல் சிதறி பலி!
கொடூரம்.. தொழுகையில் ஈடுபட்ட பாலஸ்தீனியர் மீது வாகனத்தை ஏற்றிய இஸ்ரேலிய வீரர்!