சீனாக்காரன் எப்ப பொய் சொல்ல ஆரம்பிச்சானோ அப்பவே முடிஞ்சிபோச்சு உறவு..!! ட்ரம்ப் வேதனை..!!

By Ezhilarasan BabuFirst Published Jul 11, 2020, 7:40 PM IST
Highlights

இந்நிலையில் சீனாவுடனான இரண்டாம் கட்ட ஒப்பந்தம் குறித்து நான் யோசிக்கவில்லை, கொரோனா வைரஸ் விவகாரத்தின் சீனாவுடனான உறவு கடுமையாக சேதமடைந்துள்ளது. 

கொரோனா வைரஸை சீனா தவறாக கையாண்டதால் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவு கடுமையாக சேதம் அடைந்துள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் சீனா அமெரிக்கா இடையே கையொப்பமான இரண்டாம்கட்ட வர்த்தக ஒப்பந்தத்தையும் ட்ரம்ப் நிராகரித்து வருகிறார். இது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான விரிசலை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அதிக பாதிப்புக்களை சந்தித்த முதல் நாடாக அமெரிக்கா உள்ளது. இதுவரை அமெரிக்காவில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 லட்சத்து 93 ஆயிரத்து 532 ஆக உயர்ந்துள்ளது. 1 லட்சத்து 36 ஆயிரத்து 720 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 14 லட்சத்து 60 ஆயிரத்து 731 பேர் சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளனர். 

சுமார் 16 லட்சத்து 96 ஆயிரத்து 81 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . அமெரிக்காவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் இத்தனை பெரிய பேரழிவை ஏற்படுத்தி வருவதற்கு சீனாவே மூலகாரணம் எனவும், இந்த வைரஸ் சீனாவின் ஆய்வகத்தில் இருந்து வெளியானதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். மேலும் சீனாவுக்கு எதிராக பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டு வருவதோடு, சீனாவுக்கு பல்வேறு வகைகளில் அழுத்தம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சீனாவுடனான வர்த்தக உறவுகள் தொடர்பான கேள்விக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அளித்த பேட்டியில் , கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சீனா தவறியது மிகப் பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. இது இரு நாடுகளுக்கும்  இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா உண்மைகளை மூடி மறைத்ததன் எதிரொலியாக    இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு கடுமையாக சேதமடைந்துள்ளது. 

இந்நிலையில் சீனாவுடனான இரண்டாம் கட்ட ஒப்பந்தம் குறித்து நான் யோசிக்கவில்லை, கொரோனா வைரஸ் விவகாரத்தின் சீனாவுடனான உறவு கடுமையாக சேதமடைந்துள்ளது. அவர்கள் நினைத்திருந்தால் இந்த வைரசை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தி இருக்கலாம். அதை அவர்கள் தடுத்திருக்கலாம், ஆனால் அதை அவர்கள் தடுக்கவில்லை. வுஹான் மாநிலத்தில் இருந்து சீனாவின் பிற பகுதிகளுக்கு செல்வதை அவர்கள் தடுத்து நிறுத்தினர், ஆனால் உலகின் மற்ற பகுதிகளுக்கு பரவுவதை அவர்கள் தடுக்கவில்லை என்று ட்ரம்ப் கூறினார். கொரோனா விவகாரத்தில் அமெரிக்கா சீனாவுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலையடுத்து ஹாங்காங்கில் சீனாவின் புதிய தேசிய பாதுகாப்பு சட்டம்  மற்றும் அமெரிக்க ஊடகவியலாளர்கள் மீதான கட்டுப்பாடுகள், உய்குர் முஸ்லிம்களை முகாம்களில் அடைத்து  சித்திரவதை செய்தல், திபெத்தில் சீனாவின் ஆதிக்கம் போன்ற பல்வேறு விவகாரங்களிலும் இரு நாடுகளுக்கும் இடையே  மோதல் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

click me!