சிங்களர்களால் நான் வென்றேன்... இனியாவது என்னுடன் இணைந்து செயல்படுங்கள்..!! தமிழர்களை மிரட்டிய அதிபர்..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 18, 2019, 2:29 PM IST
Highlights

திர்பார்த்தளவு தமிழர்கள் வாக்களிக்கவில்லை. இனி எதிர்வரும் காலங்களிலாவது என்னுடன்  இணைந்து செயற்பட முன்வருமாறு தமிழர்களை கேட்டுக்கொள்கிறேன்.  இலங்கை தேசத்தின்  பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே என் முதலாவது திட்டமாக இருக்கும்.  சட்டத்தின் ஆட்சியை மதிக்கிற, லஞ்ச ஊழல் அற்ற ஆட்சி ஒன்றை ஏற்படுத்துவதே என இலக்கு லட்சியம்.

சிங்கள பௌத்த  பெரும்பான்மை மக்களின் வாக்குகளினால் மாத்திரமே நான் ஜனாதிபதியாக வெற்றிபெற்றுள்ளேன் என இலங்கை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். அனுராதபுரம் ருவன்வெலி மகா சாய பௌத்த விகாரில்  திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் ஜனாதிபதியாக பதவியேற்றவுடன், அவர் இவ்வாறு பேசியுள்ளார். 

 

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், கோட்டாபயவின் சகோதரருமான மஹிந்தவின் பிறந்தநாள் இன்று என்பதால் இந்த பதவியேற்பு விழா இன்றைய தினத்தில் ஒருங்கிணைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன அழிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளான கோட்டாபயவினை எதிர்த்து தமிழர்கள் வாக்களித்த நிலையில் கோட்டாபயா சிங்களர்களின் ஆதரவில் வெற்றி பெற்றுள்ளார். சிங்களம் தமிழ் என இரண்டாக பிரிந்து நடந்த இத்தேர்தலில் கோட்டா வெற்றி பெற்றுள்ளது. மீண்டும் மீண்டும் தமிழர்களுக்கு இலங்கையில் போதாத காலம் என்பதுடன் தமிழர்கள் அங்கு சுதந்திரமாக வாழமுடியாத நிலை உருவாகி உள்ளது.  

இலங்கையில் 7வது நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதியாக வந்துள்ள  கோட்டாபய தமது பதவியேற்பின்போது ஆற்றிய உரையின் விவரம் என்ன வெனில், தமிழர்களின் வாக்குகளையும் நான் எதிர்பார்த்த போதிலும், தனக்கு  எதிர்பார்த்தளவு தமிழர்கள் வாக்களிக்கவில்லை. இனி எதிர்வரும் காலங்களிலாவது என்னுடன்  இணைந்து செயற்பட முன்வருமாறு தமிழர்களை கேட்டுக்கொள்கிறேன்.  இலங்கை தேசத்தின்  பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே என் முதலாவது திட்டமாக இருக்கும்.  சட்டத்தின் ஆட்சியை மதிக்கிற, லஞ்ச ஊழல் அற்ற ஆட்சி ஒன்றை ஏற்படுத்துவதே என இலக்கு லட்சியம்.  அத்துடன் தன்னுடன் இணைந்து செயற்பட முன்வருமாறு வெளிநாடுகளுக்கும்  கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். 

click me!