அமெரிக்கா தொடுத்த சைலன்ட் வார்... அடியோடு சரிந்த சீனா...!! ஆடிய ஆட்டத்திற்கு ஆண்டவன் கொடுத்த ஆப்பு...!!

By Ezhilarasan BabuFirst Published Jan 18, 2020, 12:14 PM IST
Highlights

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 முதல் 6.5 சதவீதம் என்ற அளவில் வைத்திருக்க சினா முயற்சிப்பதாக அந்ந அமைப்பு தெரிவித்துள்ளது.   

எப்போதும் இல்லாத அளவிற்கு சீனப் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது .  சுமார் 6.6 சதவீதம் அளவிற்கு அந்நாட்டின் பொருளாதாரம் சரிந்துள்ளது.  29 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இது பெரும் வீழ்ச்சி என பொருளாதார வல்லுனர்கள் கணித்துள்ளனர் . இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டின் தேசிய புள்ளிவிவர அமைப்பு ,  கடந்த 18 மாதங்களாக நீடித்து வந்த அமெரிக்க சீனா இடையேயான வர்த்தகப் போர் ,  மற்றும் மொத்த உள்நாட்டு தேவையில் ஏற்பட்ட மந்த நிலை போன்றவை  சீனப் பொருளாதாரத்தை வெகுவாக பாதித்திருக்கிறது என தெரிவித்துள்ளது.

 

கடந்த ஆண்டு சீன பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதம் மட்டுமே எட்டியுள்ளது . இது  கடந்த இருபது 29 ஆண்டுகளில் காணப்படாத குறைந்தபட்ச அளவாகும் .  இதற்கு முன்னர் 1990 ஆம் ஆண்டில்தான் சீனாவின் பொருளாதார வளர்ச்சி மிகவும் குறைந்த நிலையில் இருந்தது .   தற்போது மீண்டும் அதே நிலையை சீனா சந்தித்துள்ளது  என தெரிவித்துள்ளனர் .  உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட  நாடான சீனா அமெரிக்கா ,  ரஷ்யா போன்ற நாடுகளை விஞ்சும் அளவிற்கு தன் பொருளாதார வளர்ச்சியை கட்டுக்கோப்பான வைத்திருந்தது .  உள்நாட்டு உற்பத்தி, மற்றும் அபரித தொழில் வளர்ச்சி மற்றும் அதிக அளவிலான ஏற்றுமதி போன்றவற்றால் சீனா தன் பொருளாதாரத்தை ஸ்திரத்தன்மையுடையதாக கட்டி காப்பாற்றி வந்தது.   மிக வேகமாக வளரும் நாடுகள்  பட்டியலில் முதல் இடத்தில் உள்ள சீனாவிற்கு தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு  நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் என தெரிகிறது . 

ஆனாலும் பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் சீனாவின் பொருளாதாரம் 6.1 % என்ற வலுவான நிலையிலேயே உள்ளது என்றும் , மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 முதல் 6.5 சதவீதம் என்ற அளவில் வைத்திருக்க சினா முயற்சிப்பதாக அந்ந அமைப்பு தெரிவித்துள்ளது.   கடந்த நிதியாண்டில்  மொத்த உள்நாட்டு உற்பத்தி 13.1 ட்ரில்லியன் டாலரிலிருந்து 14 புள்ளி 38 டிரில்லியன் டாலராக அதிகரித்துள்ளது என அந்நாட்டின் தேசிய பள்ளி ஒரு அமைப்பு தெரிவித்துள்ளது .  கடந்த 2017 சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக இருந்த நிலையில் அமெரிக்க வர்த்தக போர் காரணமாக 2018ல் 6.6 சதவீதமாக சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது .
 

click me!