ஆப்கானிஸ்தானில் திருமண விழாவின் போது 12 வயது சிறுவன் தற்கொலை படை தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 6 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானில் திருமண விழாவின் போது 12 வயது சிறுவன் தற்கொலை படை தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 6 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நங்கர்ஹார் மாகாணத்தில் மாலில் தோர் என்பவர் வீட்டில் திருமண விழா நடைபெற்றது. அப்போது, அந்த திருமண விழாவில் வந்த 12 வயது சிறுவன் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தார்.
இந்த கோர தாக்குதலில் மாலிக் தோர் உட்பட 6 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த மாலிக் தோர் தலிபான் இயக்கத்துக்கு எதிரான அரசுப் படைகளின் ஆதரவாளர் என்று கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதல் சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது