டெஸ்லா நிறுவன காரின் பேட்டரி மாற்ற 17 லட்சம் ஆகும் என்று கூறியதால், டெஸ்லா காரை வெடிவைத்து தகர்த்து இருக்கிறார் நபர் ஒருவர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
டெஸ்லா நிறுவனத்தின் கார்கள் அனைத்தும் உலககெங்கும் புகழ்பெற்றவை. உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். இவர் பல்வேறு துறைகளில் கோலோச்சி வருகிறார். அதில் முக்கியமானது எலக்ட்ரிக் கார்கள். மின்சாரத்தில் இயங்கும் இந்த எலக்ட்ரிக் கார்கள் டெஸ்லா என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகின்றன. புதுமையான கண்டுபிடிப்புகள், பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருந்ததால் வாடிக்கையாளர்களை பெருமளவில் டெஸ்லா கார் ஈர்த்தது.
undefined
டூமாஸ் காட்டைனேன் என்பவர் தனக்கு சொந்தமான டெஸ்லா காரை கடந்த சில தினங்களுக்கு முன் பழுது பார்ப்பதற்காக ஒரு நிறுவனத்தில் ஒப்படைத்துள்ளார். அவர் காரை ஒப்படைத்த சில தினங்களில் அந்த நிறுவனத்தில் இருந்து அவருக்கு அழைப்பு வந்துள்ளது. அங்கு சென்று பார்த்த போது அவரது காரை பழுது பார்ப்பதற்கு ரூ .17,00,000 லட்சம் (இந்திய மதிப்பில் ) என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது காரை 17 லட்சம் கொடுத்து சரிபார்ப்பதற்கு பதிலாக 30 கிலோ டைனமைட்டைப் பயன்படுத்தி வெடிக்க வைத்துள்ளார்.
அவர் அந்த கரை வெடிக்க செய்வதற்கு முன் பொம்மிஜட்காட் என்ற யூடியூப் சேனலின் உதவி மூலம் அந்த நிகழ்வை படம்பிடித்துள்ளார். அதில் அவர் அந்த காரை மக்கள் கூட்டம் இல்லாத இடத்தில் வெடிக்க வைக்க தயாராகுகிறார். பின்னர் அவர் அந்த காருக்கு வெடிமருந்துகளை வைப்பதும் அதன் பிறகு அந்த கார் வெடித்து சிதறுவதும் படமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த வீடியோவை அந்த யூடியூப் சேனல் பல்வேறு கோணங்களில் இருந்து படம் பிடித்துள்ளனர்.இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து பேசிய டூமாஸ் காட்டைனேன், ‘என்னால் 22 ஆயிரம் யூரோ கொடுத்து காரை சரிசெய்ய முடியும். ஆனால் டெஸ்லா கார்கள் குறித்து உலக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இப்படி செய்தேன்.டெஸ்லா காரை வைத்திருந்ததை விட தற்போதுதான் சந்தோஷமாக இருப்பதாக கடைனென் தெரிவித்தார். மேலும் இந்த உலகிலேயே டெஸ்லா காரை வெடி பொருள் வைத்து தகர்த்த ஒரே ஆள் நான்தான். இது வரலாற்றில் இடம் பெறும்’ என்றார்.