400 கிலோ யுரேனியம் மாயம்! 10 அணு ஆயுதங்கள் செய்யலாம்! நைசாக மாற்றிய ஈரான்?

Published : Jun 24, 2025, 04:39 PM IST
Nuclear Weapons

சுருக்கம்

ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில், அங்கு இருந்த 400 கிலோ யுரேனியம் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Iran Israel War! 400 Kg Of Uranium Disappeared: ஈரான் தங்களுக்கு எதிராக அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறி இஸ்ரேல் அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தியது. ஈரான் இதற்கு பதிலடி கொடுக்க இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் மூண்டது. இரு தரப்பினரும் ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலம் தொடர்ந்து தாக்குதல் நடத்தினர். இதற்கிடையே இந்த போரில் அமெரிக்காவும் களமிறங்கியது. ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியது.

போரை நிறுத்தியதாக டிரம்ப் அறிவிப்பு

இரு தரப்புக்கும் இடையே மோதல் தீவிரமான நிலையில், இஸ்ரேலும், ஈரானும் போரை நிறுத்தியதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். போர் நிறுத்தம் செய்வதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால் ஈரான் அதிகாரப்பூர்வமாக ஏதும் அறிவிக்கவில்லை. போர் நிறுத்தத்தை மதிக்காமல் ஈரான் தங்களை தாக்குவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது.

3 அணுசக்தி நிலையங்களை தாக்கிய அமெரிக்கா

இந்நிலையில், ஈரானிய அணுசக்தி நிலையங்களில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியபோது அங்கிருந்த 400 கிலோ யுரேனியம் மாயமாகியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதாவது ஈரானின் மூன்று அணுமின் நிலையங்கள் மீது அமெரிக்கா சமீபத்தில் குண்டுவீசித் தாக்கியது. ஃபோர்டோ, நதான்ஸ், இஸ்ஃபஹான் அணுமின் நிலையங்கள் மீதுதான் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. பி2 ரக குண்டுகள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

400 கிலோ யுரேனியம் மாயம்

இப்போது இந்த அணுசக்தி நிலையங்களில் இருந்து 400 கிலோ யுரேனியம் காணாமல் போனாதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது 10 அணு ஆயுதங்களை உருவாக்க போதுமானது என்றும் அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி.வான்ஸ் கூறியுள்ளார். அமெரிக்காவின் தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்பு ஈரான் கையிருப்பை ஒரு ரகசிய இடத்திற்கு நகர்த்தியிருக்கலாம் என்று தகவல்கள் உள்ளன. அமெரிக்காவின் தாக்குதலுக்கு முந்தைய செயற்கைக்கோள் படங்கள், ஃபோர்டோ அணுமின் நிலையத்திற்கு வெளியே 16 லாரிகள் வரிசையாக நிற்பதைக் காட்டியது. இந்த ஆலை ஒரு மலைக்குள் கட்டப்பட்டுள்ளது.

ஈரான் இடம் மாற்றி இருக்கலாம்

அங்கு இருந்த யுரேனியம் எங்கு கொண்டு செல்லப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும் அமெரிக்காவும் இஸ்ரேலும் பண்டைய தலைநகரான இஸ்பஹானுக்கு அருகிலுள்ள மற்றொரு நிலத்தடி சேமிப்பு இடத்தில் யுரேனியம் மாற்றப்பட்டு இருக்கலாம் என உறுதியாக நம்புகின்றன. சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவரான ரஃபேல் க்ரோஸியின் கூற்றுப்படி, ஈரான் மீதான இஸ்ரேலின் முதல் தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு இது கடைசியாக ஆய்வு செய்யப்பட்டது.

அணு ஆயுதங்களை தயாரிக்கும் ஈரான்

ஈரான் நீண்ட காலமாக தனது அணுசக்தி திட்டம் அமைதியான நோக்கங்களுக்காகவே என்று வலியுறுத்தி வருகிறது. ஆனாலும் அமெரிக்காவும், இஸ்ரேலும் மற்ற சில நாடுகளும் ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக குற்றம்சாட்டி வருகின்றன. இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பிறகு, அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து, சர்வதேச அமைப்பான அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ஈரான் அச்சுறுத்தியது. ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் தக்த் ரவாஞ்சி, இந்தத் திட்டம் கைவிடப்படும் என்ற கூற்றுக்களை மறுத்தார். "என்ன செய்வது என்று யாராலும் எங்களுக்குச் சொல்ல முடியாது'' என்று தெரிவித்தார்.

அமெரிக்க உளவுத்துறை சொன்னது என்ன?

இஸ்ரேலின் முதல் சுற்று ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த வாரம் சிஎன்என் அறிக்கையின்படி, ஈரான் அணு ஆயுதங்களைத் தொடரவில்லை என்றும், அதை உருவாக்க குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் ஆகும் என்றும் அமெரிக்க உளவுத்துறை தெரிவித்தது. இஸ்ரேலின் தாக்குதல்கள் ஈரானை சில மாதங்கள் மட்டுமே பின்னுக்குத் தள்ளியதாக இன்டெல் மேலும் கூறியது, ஏனெனில் ஆராய்ச்சியின் பெரும்பகுதி இஸ்ரேலிய ஏவுகணைகள் சேதப்படுத்த முடியாத ஃபோர்டோ போன்ற தளங்களில் ஆழமான நிலத்தடியில் புதைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்தியாவின் எதிரி..! இனி ரஷ்யாவின் எதிரி.. இனி எவனும் வாலாட்ட முடியாது.. வேற லெவல்
Putin in India: புதினுக்கு பகவத் கீதையை பரிசாக வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி