உலக செய்திகளில் டிரென்டிங்கில் இடம் பிடித்த 3 பேர் தமிழர்கள்… ஒரே வாரத்தில் அதிரடி !!

Published : Dec 06, 2019, 09:09 AM IST
உலக செய்திகளில் டிரென்டிங்கில் இடம் பிடித்த 3  பேர் தமிழர்கள்… ஒரே வாரத்தில் அதிரடி !!

சுருக்கம்

சமூக வலைதளங்களில் கடந்த ஒரு வாரத்தில் 3 தமிழர்கள்  குறித்த செய்திகள் டிரெண்டிங்கில் இடம் பெற்றுள்ளன.  

உலகம் முழுவதும் நாள்தோறும் பல்வேறு சம்பவங்களும் சாதனை நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. அவற்றில் சில செய்திகள் மட்டுமே சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகிறது. கடந்த ஒரு வாரத்தில் உலக செய்திகளில் மூன்று தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அதில் முதல் இடத்தில் மதுரையில் பிறந்த, 47 வயதான சுந்தர்பிச்சை இடம்பெற்றுள்ளார். உலக தொழில்நுட்பத்தை தன்னுள் வைத்திருக்கும் நிறுவனங்களில் ஒன்றான கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரியாக சில ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவரின் பொறுப்பில் கூகுள் நிறுவனம் அசாத்திய வளர்ச்சியை கண்டதால் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்திற்கும், மேலும் 8 நிறுவனங்களுக்கும் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு அடுத்தப்படியாக திருவண்ணாமலையில் பிறந்து ஆன்மிக வாழ்க்கையில் சேவை செய்வதாக கூறி வரும் பிரபல சாமியார் நித்யானந்தா, வித்தியாசமான முறையில் உலக டிரெண்டிங்கில் இடம் பெற்றார். ஆசிரம பெண்களை கொடுமைப்படுத்தியது, பாலியல் புகார், உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளில் பிரபலமான இவர், சில நாட்களாக கைலாசா என்ற தனி நாடு குறித்து அதிகம் பேசப்பட்டுள்ளார்.

மூன்றாவதாக, நிலவில் காணாமல் போன விக்ரம் லேண்டரை மதுரையை பூர்வீகமாக கொண்டு சென்னையில் என்ஜினீயராக உள்ள சண்முக சுப்பிரமணியன் கண்டுபிடித்ததாக நாசாவே பாராட்டியதில் ஒரே நாளில் உலகமே வியந்து பாராட்டும் அளவிற்கு பேசப்பட்டார்.
இந்த மூன்று பேரும் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருந்தாலும். நித்யானந்தா செய்த மட்டும் சற்று உறுத்தலைத் தருகிறது என்பதே உண்மை.

PREV
click me!

Recommended Stories

அமெரிக்க பல்கலையில் துப்பாக்கிச்சூடு.. ஒரு மாணவர் பலி சந்தேக நபர் கைது!
யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் தீபாவளி பண்டிகை! பிரதமர் மோடி மகிழ்ச்சி!