உலக நாடுகள் அலட்சியம்.. கொரோனாவின் 2வது அலை நிச்சயம்.. இதில் யாரும் மீள முடியாது.. உலக சுகாதார அமைப்பு பகீர்.!

Published : Sep 17, 2020, 06:23 PM ISTUpdated : Sep 17, 2020, 06:28 PM IST
உலக நாடுகள் அலட்சியம்.. கொரோனாவின் 2வது அலை நிச்சயம்.. இதில் யாரும் மீள முடியாது.. உலக சுகாதார அமைப்பு பகீர்.!

சுருக்கம்

கொரோனா விஷயத்தில் பல்வேறு உலக நாடுகள் அலட்சியமாக கையாள்வதால் 2வது அலையை தவிர்க்கவே முடியாது. அது அபாயகரமானதாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா விஷயத்தில் பல்வேறு உலக நாடுகள் அலட்சியமாக கையாள்வதால் 2வது அலையை தவிர்க்கவே முடியாது. அது அபாயகரமானதாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனாவால் பல்வேறு நாடுகளை சேர்ந்த 9.50 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இதுவரை 82,066 பேர் உயிரிழந்துள்ளனர். 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்துகள், பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான சிகிச்சை மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், இதுவரையிலான கொரோனா தாக்குதல் என்பது ஆரம்ப கட்டம்தான். இனிமேல்தான் தாக்குதல் தீவிரமாகும்.

உலகம் முழுவதும் கொரோனாவின் 2ம் அலை பரவுவது நிச்சயம். அதை தடுக்க முடியாது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து உலகின் தலை சிறந்த மருத்துவ நிபுணரும், உலக சுகாதார அமைப்பின் பொது நிர்வாக இயக்குனருமான டேவிட் நபாரோ, லண்டனில் நடந்த வெளியுறவுத் துறை செயலர்களின் கூட்டத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் கூறியுள்ளதாவது: கொரோனா பரவல் குறித்து தற்போது கவலையே இல்லாமல் பல நாடுகள் செயல்படுகின்றன. இது மிகப்பெரிய ஆபத்துக்கு வழிவகுக்கும். வரக்கூடிய அபாயத்தை உணர்ந்து செயல்பட வேண்டிய சமயம் இது. 

இதுவரையிலான கொரோனாவின் தாக்குதல் என்பது வெறும் துவக்க நிலைதான். இன்னும் நடுக்கட்டத்தை அடையவில்லை. இந்நிலையில் கொரோனாவை எதிர்கொள்வதில் உலக நாடுகளிடம் தற்போது அலட்சியப் போக்கு ஏற்பட்டுள்ளது. எனவே கொரோனாவின் 2வது அலை நிச்சயம். அதை தடுக்க முடியாது. அது மிகவும் அபாயகரமானதாக இருக்கும். குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் பெரும் இழப்புகளை ஏற்படுத்தும். ஏற்கனவே கட்டுப்படுத்த முடியாத நிலையில்தான் இதுவரை கொரோனா உள்ளது.  குறிப்பாக உலகம் முழுவதும் ஏழைகள், தங்கள் வாழ்வாதாரத்தை அடியோடு இழந்து, இருமடங்கு பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் தீபாவளி பண்டிகை! பிரதமர் மோடி மகிழ்ச்சி!
உக்ரைன் போரில் தோற்றுவிட்டது.. ரஷ்யா தான் பலமான நாடு.. கடுப்பாகி கத்திய டிரம்ப்!